Connect with us

பாக்கியராஜால் பள்ளிக்கூடம் போறதையே விட்டுட்டேன்! – நடிகை பானுப்பிரியா சொன்ன சம்பவம்!

Cinema History

பாக்கியராஜால் பள்ளிக்கூடம் போறதையே விட்டுட்டேன்! – நடிகை பானுப்பிரியா சொன்ன சம்பவம்!

Social Media Bar

தமிழ் சினிமாவில் 80களில் இருந்து பிரபலமாக இருந்து வந்த இளம் நடிகைகளில் அம்பிகா, ராதா, பானுப்பிரியா, கௌதமி போன்றவர்கள் முக்கியமானவர்கள். பானுப்பிரியா சிறந்த நடிகை மட்டுமல்லாமல் சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட.

1983க் வெளியான ‘மெல்ல பேசுங்கள்’ படம் மூலம் 17 வயதில் சினிமா உலகில் அறிமுகமான பானுப்பிரியா தொடர்ந்து ஷத்ரியன், பங்காளி, காவியத்தலைவன், அழகன்,மஹராசன் உள்ளிட்ட தமிழ் படங்களில் தமிழ் முன்னணி ஹீரோக்களிடன் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிராந்திட மொழிப்படங்களிலும் நடித்தார்.

தான் திரைத்துறைக்கு வந்தது குறித்த சுவாரஸ்யமான சம்பவத்தை சமீபத்தில் பானுப்பிரியா ஒரு பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அப்போது பானுப்பிரியா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம். பாக்கியராஜ் பிரபலமான இயக்குனராக மாறியிருந்தார். ஒருசமயம் பானுபிரியாவின் நடனத்தை பார்த்த பாக்கியராஜ் அவரை தனது படத்தில் நடிக்க வைக்க அணுகியுள்ளார்.

இதற்காக பானுப்பிரியாவை போட்டோஷூட்டும் செய்துள்ளார்கள். பானுப்பிரியாவும் மகிழ்ச்சியில் பள்ளி தோழிகளிடம் தான் பாக்கியராஜ் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லியுள்ளார். ஆனால் கதாப்பாத்திரத்தை விட பானுப்பிரியா சிறிய பெண்ணாக இருப்பதாக கருதிய பாக்கியராஜ் அவருக்கு வாய்ப்பு தரவில்லையாம். இதனால் பள்ளி தோழிகளின் கேலி, கிண்டலுக்கு உள்ளான பானுப்பிரியா பள்ளிக்கு செல்வதையே நிறுத்திவிட்டாராம்.

பின்னர் சினிமா உலகில் பெரும் போராட்டங்களுக்கு பிறகு 1983ல் தான் அவருக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் பிறகு விஜயகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக பானுப்பிரியா நடித்தார்.

To Top