Connect with us

நான் எடுத்த முதல் படமே என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுதான்.. உண்மையை கூறிய பாக்கியராஜ்!..

bhagyaraj

Cinema History

நான் எடுத்த முதல் படமே என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுதான்.. உண்மையை கூறிய பாக்கியராஜ்!..

Social Media Bar

தமிழ் திரை இயக்குனர்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையையே திரைப்படத்தின் முக்கிய கதையாகக் கொண்டு படம் எடுப்பவர் பாரதிராஜா. அவரின் முதல் படத்திலிருந்து அனைத்து திரைப்படங்களிலுமே பாமர மக்கள்தான் படத்தின் கதாநாயகர்களாக இருப்பார்கள்.

தினமும் நாம் எங்கோ ஒரு இடத்தில், ஒரு குடும்பத்தில் கேள்விப்பட்ட ஒரு கதைதான் பாரதிராஜாவின் திரைப்படமாக இருக்கும். அவரிடம் பணிபுரிந்த பாக்கியராஜ் இந்த விஷயத்தை மிக நன்றாகவே கற்றுக் கொண்டார். மக்களுக்கு நெருக்கமான சகஜமான கதைகளை எடுக்கும் பொழுதுதான் அது மக்களிடம் பெரும் வரவேற்பை பெறுகின்றன என்பதை பாக்கியராஜ் புரிந்து கொண்டார்.

எனவே அவர் எடுக்கும் படங்களும் கூட சாமானிய மனிதன்தான் கதாநாயகனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்பொழுது தனது முதல் திரைப்படமான சுவரில்லா சித்திரங்கள் படத்தை இயக்குவதற்கு இருந்தார் பாக்கியராஜ்.

அந்த திரைப்படத்தின் கதையை எழுதும் பொழுது தனது வாழ்க்கையில் நடந்த நிஜ நிகழ்வுடன் கலந்து அந்த கதையை எழுதினார். பாக்யராஜின் வீட்டிற்கு எதிரில் ஒரு ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் நான்கு பெண்களும் ஒரு தாயும் வாழ்ந்து வந்தனர். அந்த தாய்க்கு கணவர் இல்லை. தையல் வேலை பார்த்து கஷ்டப்பட்டுதான் அந்த குடும்பத்தை நடத்தி வந்தனர்.

இந்த குடும்பத்தைதான் சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்தில் கதாநாயகியின் குடும்பமாக எடுத்துக் கொண்டார் பாக்யராஜ். அந்த நான்கு பெண்களில் ஒரு பெண் காதலித்தால் அதனால் நடக்கும் இடையூறுகளை கதைகளாக கொண்டுதான் சுவரில்லா சித்திரங்கள் படத்தின் கதை எழுதப்பட்டது.

இது குறித்து பாக்கியராஜ் கூறும் பொழுது ஏன் படத்திற்கு சுவரில்லா சித்திரங்கள் என பெயர் வைத்தேன் என்றால், கணவன் இல்லா வீடு என்பதை குறிக்கும் விதத்தில்தான் அந்தப் பெயர் வைக்கப்பட்டது என்று கூறியுள்ளார். இதே போல தாவணி கனவுகள் திரைப்படத்திலும் நான்கு தங்கைகளுக்கு ஒரு அண்ணன் இருப்பார். அந்த அண்ணன் படும் கஷ்டங்களை வைத்து படம் செல்லும். ஆக தனது வீட்டிற்கு எதிரில் இருந்த அந்த குடும்பம் பாக்யராஜின் இரண்டு திரைப்படங்களில் வந்துள்ளன.

To Top