News
பீஸ்ட்டு ஓடுண அளவுதான் வலிமையும் ஓடுணுச்சு – உண்மையை உடைத்த விநியோகஸ்தர்
தமிழில் ரசிகர்கள் போட்டி என்பது எப்போதும் முடிவுறாத ஒரு விஷயமாகும். திரை ரசிகர்கள் தங்களுக்கென ஒரு தலைவனை கொண்டு சண்டையிடுவது என்பது எம்.ஜி.ஆர் காலம் தொட்டே நடந்து வருகிறது.

தற்சமயம் விஜய், அஜித் ரசிகர்கள் அப்படியான போட்டிக்குள் இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெறவில்லை என பேசப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் விஜய் ரசிகர்களை கேலி செய்து வந்தனர்.
ஆனால் அஜித் நடித்து வெளியான வலிமை திரைப்படம் நல்ல வசூல் சாதனை படைத்ததாக திரை உலகிலேயே பேசப்பட்டது. இந்நிலையில் பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு பேட்டியில் கூறும்போது வலிமை மற்றும் பீஸ்ட் இரண்டு படங்களுமே சமமான அளவில்தான் ஓடின. எங்களுக்கும் இரண்டிலுமே சமமான அளவில்தான் லாபம் கிடைத்தது என கூறியுள்ளார்.
இதுவரை பலரும் பீஸ்ட் ஓடவில்லை, வலிமைதான் வசூல் சாதனை செய்தது என நம்பி வந்த நிலையில் இரண்டு படமுமே ஒரே அளவில் ஓடி இருப்பதாக கூறி இருப்பது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
