News
லீக் ஆன வாரிசு ரஞ்சிதமே பாடல் – குஷியில் ரசிகர்கள்
8 வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் இருவரும் நேரடியாக போட்டி போட்டு வெளியிடும் திரைப்படங்களாக வாரிசு மற்றும் துணிவு ஆகியவை உள்ளன.

வாரிசு அதிகப்படியாக தெலுங்கு திரை ரசிகர்களை டார்கெட் செய்து வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் இயக்குனர் வம்சி, தெலுங்கில் ஏற்கனவே மகேஷ் பாபுவை வைத்து மகரிஷி என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர்.
மேலும் படத்தின் கதாநாயகி ராஷ்மிகாவும் தெலுங்கு கதாநாயகி, இசையமைப்பாளர் தமனும் கூட தெலுங்கில் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். ஆனால் இந்த படத்தில் இசைக்கு முக்கியமான பங்கு உள்ளது. ஏனெனில் இசையமைப்பாளர் தமனின் இசை தமிழ், தெலுங்கு என இருவகை சினிமா ரசிகர்களுக்கும் பிடித்ததாக இருக்க வேண்டும்.
இந்நிலையில் படத்தில் வரும் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்கிற பாடலின் சில காட்சிகள் லீக் செய்யப்பட்டுள்ளன. இந்த பாடல் காட்சிகளை பார்க்கும்போது ஐட்டம் சாங் போல இருக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த பாடல் கேட்பதற்கு நன்றாக உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
