Bigg Boss Tamil
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? – லட்ச கணக்குல வருதே!
தற்சமயம் பிக் பாஸ் போட்டிகள் கலக்கலப்பாக சென்றுக்கொண்டுள்ளன. பிக்பாஸ் போட்டியில் கலந்துக்கொள்பவர்கள் சும்மா பிக் பாஸ் போட்டிக்கு வருவதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் அதிக அளவில் சம்பளம் வாங்கி கொண்டுதான் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சிக்கு அதிகமான வருவாயை ஈட்டி தரும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதால் அந்த வருவாயோடு ஒப்பிடும்போது அதில் கலந்து கொள்பவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் குறைவுதான்.
மொத்தம் 21 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளனர். அதில் ஒவ்வொருவருக்கும் 10,000 முதல் 20 ஆயிரத்திற்குள் ஒரு நாள் சம்பளமாக தரப்படுகிறது. அவர்கள் எவ்வளவு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்து இந்த சம்பளம் அமைகிறது.
அதை வைத்து பார்க்கும்போது இந்த 21 பேருக்கும் கிட்டத்தட்ட 63 லட்சம் முதல் ஒரு கோடி வரை மாத சம்பளமாக தருகின்றனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு நடிகர் கமலுக்கு 75 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
