பீஸ்ட் க்ளைமேக்ஸை கலாய்த்த இந்தி நெட்டிசன்ஸ்! – பதிலடி கொடுத்த தளபதி ஃபேன்ஸ்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

Beast-3

இந்த படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியானது. படம் வெளியான நாள் முதலாக கலவையான விமர்சனங்களையே எதிர்கொண்டு வந்தது. முக்கியமாக படம் முழுக்க விஜய் முகத்தை ஒரு மாதிரியே வைத்திருப்பது ரசிகர்களுக்கே அவ்வளவாக ரசிக்கவில்லை.

மேலும் பல காட்சிகள் மிகவும் மோசமாக கையாளப்பட்டிருப்பதாக பலரும் குறை கூறி வந்தனர். இந்நிலையில் இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Beast

இந்த படத்தில் க்ளைமேக்ஸில் வரும் ரஃபேல் போர் விமான காட்சியை பார்த்த விமானப்படை அதிகாரி ஒருவர் “இது எனக்கு நிறைய கேள்வியை எழுப்புகிறது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த பலர் இதுதான் சந்தர்ப்பமென்று படத்தின் லாஜிக்கை பங்கமாக கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் பல இந்தி படங்களில் இருக்கும் லாஜிக்கே இல்லாத சீன்களை எடுத்துபோட்டு ”இப்படியெல்லாம் படம் எடுத்துட்டு எங்கள கேள்வி கேட்கலாமா?” என்ற ரீதியில் வாதம் செய்து வருகிறார்கள். இதனால் நேற்று முதலாகவே சோசியல் மீடியாக்கள் பரபரப்பாக காணப்படுகிறது.

You may also like...