Connect with us

உண்மையிலேயே அந்த பாட்டை இந்த முறையில்தான் தயார் பண்ணுனோம்!.. சத்தம் இல்லாத தனிமை கேட்டோம் பாட்டின் பலவருட சீக்ரெட் கதை!..

amarkalam

Cinema History

உண்மையிலேயே அந்த பாட்டை இந்த முறையில்தான் தயார் பண்ணுனோம்!.. சத்தம் இல்லாத தனிமை கேட்டோம் பாட்டின் பலவருட சீக்ரெட் கதை!..

Social Media Bar

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் சிறப்பான பாடல்களை பாடியவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். அப்போதைய சமயத்தில் இசையமைப்பாளர்களில் எப்படி இளையராஜா மிகவும் பிரபலமாக இருந்தாரோ அதேபோல பாடகர்களில் எஸ்பிபி மிகப் பிரபலமாக இருந்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் பாடல்களை பாடுவதற்கு எஸ்பிபி அறிமுகமாகிவிட்டார். தமிழில் அவர் எக்கசக்கமான பாடல்களை பாடி இருந்தாலும் கூட சில பாடல்கள் அவருக்கு மிகுந்த சவால்களாக இருந்திருக்கின்றன.

SPB-1
SPB-1

அப்படியான ஒரு சில பாடல்களில் அமர்க்களம் திரைப்படத்தில் வரும் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலும் மிக முக்கியமான ஒரு பாடலாகும். இப்போது வரை அந்த பாடலை எப்படி மூச்சு விடாமல் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடினார் என்கிற கேள்வி பலருக்கும் இருந்த வருகிறது.

இன்னும் சிலர் அந்த பாடலை எஸ்பிபி நிஜமாகவே மூச்சு விடாமல் பாடினார் என்று நினைத்து வருகின்றனர். இந்த நிலையில்  எஸ்பிபி ஒரு பேட்டியில் கூறும் பொழுது அதற்கு நாங்கள் ஒரு ட்ரிக்கை பின்பற்றினோம் என்று கூறினார். ஆனால் அது என்ன விஷயம் என்று அவர் கூறவில்லை.

amarkalam
amarkalam

இந்த நிலையில் அந்த பாட்டிற்கு இசையமைத்த பரத்வாஜ் அந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். அதாவது மொத்தமாக அந்த பாடலை இரண்டு முறை எஸ்பிபி பாடி இருக்கிறார் முதல் முறை பாடும் பொழுது பாடல் வரிகளில் ஒன்றாவது வரி, மூன்றாவது வரி, ஐந்தாவது வரி, ஏழாவது வரி இப்படி ஒரு வரி விட்டு ஒரு வரி என்று பாடி இருக்கிறார்.

பிறகு இரண்டாவது முறை பாடும்பொழுது இரண்டு நான்கு ஆறு ஆகிய வரிகளை பாடியுள்ளார் எஸ்பிபி. இவற்றை சரியாக அடுக்கி அந்த பாடலை இசை அமைத்திருக்கிறார் பரத்வாஜ். அப்படி பாடியும் கூட ராகத்தில் எந்த பிரச்சனையும் வராமல் அந்த பாடலை பாடியிருந்தார் எஸ்பிபி.

To Top