அந்த மெலோடி பாட்டு பிடிக்கல!.. அப்ப கானாவா மாத்திடுறேன்!.. ரஜினிக்கே விபூதி அடித்த இசைஞானி!.
Ilayaraja: பொதுவாக திரைப்படம் இயக்கும்போது அதில் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களின் தலையீடு என்பது இருந்து கொண்டேதான் இருக்கும். திரைப்படத்தின் கதையில் துவங்கி அதில் இசை பாட்டு என்று அனைத்திலும் இந்த கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்கள் தலையிடுவது உண்டு.
அவர்களை வைத்துதான் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் ரஜினிகாந்த் அதில் கொஞ்சம் மேலே போய் இளையராஜாவிடமே பிரச்சனை செய்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

ரஜினிகாந்த்தை வைத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் வீரா. அதற்கு முன்பு ரஜினிகாந்தை வைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் படங்களாக இருந்ததால் இந்த ஒரு திரைப்படம் குடும்ப பாணியில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ரஜினிகாந்த்.
அதனை தொடர்ந்து வீரா திரைப்படம் இயக்கப்பட்டது. வீரா திரைப்படத்தை பொறுத்தவரை ரஜினிகாந்த்திற்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள் அவர்கள் இடையே ரஜினிகாந்த் சமாளிக்கும் விஷயங்களை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதே படத்தின் கதையாக இருக்கும்.
மாஸ் காட்டிய இளையராஜா:
இந்த நிலையில் படத்தில் கதைப்படி ரஜினிகாந்த் ஒரு பாடகர் என்பதால் படத்தில் உள்ள அனைத்து பாடல்களை சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே இளையராஜாவிடம் கூறியிருந்தனர். அதற்கு தகுந்தார் போல இளையராஜாவும் இசையமைத்திருந்தார்.
ஆனால் அந்த திரைப்படத்தில் வரும் கொஞ்சி கொஞ்சி மலர்கள் ஆட என்கிற பாடல் ரஜினிகாந்திற்க்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இந்த நிலையில் அந்த பாடல் மிகவும் மெலோடியாக இருக்கிறது. எனக்கு ரசிகர்கள் எழுந்து நடனமாடும் அளவிற்கு அந்த பாடல் இருக்க வேண்டும் எனவே அந்த பாடலை மாற்றி விடுங்கள் எனக் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்த செய்தி இளையராஜாவிருக்கும் வந்திருக்கிறது அதற்கு முன்பு வரை அந்த பாடலின் இசை நாம் இப்போது கேட்டதை விடவும் மெலோடியாகத்தான் இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் இப்படி கூறியவுடன் அவர் பாடலை மாற்றாமல் அந்த பாடலின் இசையை மட்டும் மாற்றி அதே கொஞ்சி கொஞ்சி மலர்கள் ஆட பாடலை எழுந்து நடனமாடும் அளவிற்கு அதிக சத்தம் உடைய பாடலாக மாற்றி இருந்தார்.
அதைக் கேட்ட ரஜினிகாந்திற்கே ஆச்சரியமாக போய்விட்டது ஒரு மெலோடி பாடலை எப்படி இப்படி ஒரு குதூகலமான பாடலாக மாற்றினீர்கள் என்று ஆச்சரியமாக இளையராஜாவிடம் கேட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.