Cinema History
வாய்ப்பு ஒரு முறைதான் வரும்? – இயக்குனர் ஸ்ரீதர் சினிமாவிற்கு வந்த கதை தெரியுமா?
துவக்க கால தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குனர் ஸ்ரீதர். அவர் இயக்கிய காதலிக்க நேரமில்லை திரைப்படம் எல்லாம் இப்போது கூட பார்ப்பவர்களை கவரும் திரைப்படமாக உள்ளது.
முதன் முதலில் ஜெயலலிதாவை தனது வெண்ணிற ஆடை என்கிற திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீதர். அப்படிப்பட்ட ஸ்ரீதர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார்.
படத்திற்கான கதையை வைத்துக்கொண்டு பல இடங்களில் ஏறி இறங்கியுள்ளார். அப்போது அவரது நண்பர் ஒருவர் “இந்த கதையை நாடக நிறுவனங்களிடம் கொண்டு கொடு.அவர்கள் அதை நாடகமாக எடுத்தால் கண்டிப்பாக படமாக எடுப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்” என்றார்.
எனவே ஸ்ரீதர் டி.கே சண்முகம் என்கிற நாடக குழு நடத்துபவரை அணுகினார். அணுகுவதற்கு முன்பே தனது கதையின் சுருக்க வடிவம், விரிவான வடிவம் என அனைத்தையும் பக்காவாக செய்துக்கொண்டு அவரை பார்க்க சென்றார் ஸ்ரீதர்.
அதே போல அவரை சந்தித்த உடன் கதையின் சுருக்க வடிவம் இருந்தால் கொடுங்கள் என கேட்டார் டி.கே சண்முகம். அதை படித்ததும் அவருக்கு கதை பிடித்துப்போனது. விரிவான கதையை கொண்டு வர சொன்னார். மறுநாளே விரிவாக திரைக்கதையுடன் நின்றார் ஸ்ரீதர்.
அதை படித்த சண்முகம், “கதை சினிமாவிற்கு ஏற்ற மாதிரி இருக்கிறது. நாடகத்திற்கு தகுந்தாற் போல சில மாற்றங்களை செய்தால் பரவாயில்லை” என கூறவும், அடுத்த சில நாட்களில் அதை நாடகத்திற்கு தகுந்தாற் போல மாற்றினார் ஸ்ரீதர்.
அந்த கதை ரத்த பாசம் என்கிற பெயரில் நாடகமானது. பிறகு பிரபலமாகி அதுவே அவரது முதல் படமானது. வந்த ஒரு வாய்ப்பையும் தவற விடாமல் பெரிதாக உழைத்து அதை தக்க வைத்து கொண்டதால்தான் ஸ்ரீதர் இவ்வளவு பெரிய இயக்குனராகி உள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்