Cinema History
விஜயகாந்திற்கு கேப்டன் என்கிற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இதுதான் காரணம்!..
Vijayakanth: தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்தை பொருத்தவரை எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் அனைவருக்கும் நன்மைகள் செய்த ஒரு பெரும் தலைவராகத்தான் விஜயகாந்த் பார்க்கப்படுகிறார்.
ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த போது உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்ட காரணத்தினால் அதன் பிறகு தொடர்ந்து மக்களுக்கு உணவளித்து வந்தவர் விஜயகாந்த். மேலும் நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது நடிகர் சங்கத்திற்கு நிறைய நன்மைகளை செய்து இருக்கிறார்.
இதனால் அப்போது நடிகர்கள் எல்லாம் என்ன பிரச்சனை என்றாலும் உடனே அதற்கு விஜயகாந்த்தை தான் தொடர்பு கொள்வார்கள். இந்த நிலையில்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார் விஜயகாந்த். அரசியலுக்கு வந்த பிறகு எதிர் கட்சி தலைவர் பதவி வரை அவரது அந்தஸ்து உயர்ந்தது.
ஆனால் அதற்குப் பிறகு ஏற்பட்ட உடல்நல குறைவால் தொடர்ந்து அவரால் அரசியலில் நீடிக்க முடியவில்லை. இந்த நிலையில் விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற பெயர் எப்படி வந்தது என்பது குறித்து பல்வேறு கதைகள் பரவி வருகின்றன.
இது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி கூறும்போது 1988 இல் வெளியான செந்தூரப்பூவே என்கிற திரைப்படம்தான் விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற பெயர் வருவதற்கு காரணமாக அமைந்த திரைப்படம் என கூறுகிறார். செந்தூரப்பூவே திரைப்படத்தில் கேப்டன் சௌந்தரபாண்டியன் என்பதுதான் விஜயகாந்தின் பெயராக இருந்தது.
எனவே படப்பிடிப்பில் அவரை கூப்பிடும் போதெல்லாம் கேப்டன் என்று அழைத்து இருக்கின்றனர். இந்த விஷயம் விஜயகாந்தின் அலுவலகத்தில் தெரிந்து அங்கேயும் அவரை கேப்டன் என அழைக்க துவங்கியுள்ளனர் இப்படித்தான் அந்த கேப்டன் என்கிற பெயர் விஜயகாந்திற்கு ஒரு நிரந்தரமான பெயராக மாறியது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்