Connect with us

மீண்டும் ராசுக்குட்டி !- யூ ட்யூப்பில் களம் இறங்கிய பாக்கியராஜ்?

News

மீண்டும் ராசுக்குட்டி !- யூ ட்யூப்பில் களம் இறங்கிய பாக்கியராஜ்?

Social Media Bar

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக பல ஹிட் கொடுத்தவர் நடிகர் பாக்கியராஜ்.

இவரே நடித்து இயக்கிய பல படங்கள் அப்போதைய தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தாவணி கனவுகள், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு போன்ற இவரது பல படங்கள் பிரபலமானவை.

ஆனால் வயதாகிவிட்டதால் தற்சமயம் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார் பாக்கியராஜ். துப்பறிவாளன் போன்ற சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் யூ ட்யூப்பில் அடுத்து தனது பயணத்தை தொடரலாம் என முடிவு செய்துள்ளார் பாக்கியராஜ். பல நாட்களாக உங்கள் கே பாக்கியராஜ் என்கிற சேனலை நடத்தி வருகிறார். ஆனால் அந்த சேனல் அந்த அளவிற்கு வரவேற்பை பெறாமல் இருந்தது.

இந்நிலையில் அவர் நடித்து பிரபலமான ராசுக்குட்டி என்கிற படத்தை கொண்டு யூ ட்யூப்பில் ஒரு சீரிஸ் செய்யலாம் என திட்டமிட்டுள்ளார் பாக்கியராஜ். மீண்டும் ராசுக்குட்டி என்னும் இந்த தொடரின் ப்ரோமோவை வெளியிட்டிருந்தார்.

தற்சமயம் அதன் முதல் எபிசோடு வெளியாகியுள்ளது. அதை காண இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

To Top