Cinema History
பாலச்சந்தர் கூட அப்படி படம் எடுக்கல!.. பாக்கியராஜ் துணிந்து எடுத்த புது ரக சினிமா!.. எந்த படம் தெரியுமா?
Bhagyaraj – தமிழ் சினிமா இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். மக்கள் மனதை புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல படம் இயக்கியதால் அவரது திரைப்படங்களுக்கு அப்போது வரவேற்பு அதிகமாகவே இருந்தது.
இந்த நிலையில் புது விதமான திரைப்படத்தை அவரை அறியாமலே முயற்சி செய்திருக்கிறார் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மௌன கீதங்கள் (Mouna Geethangal). இந்த திரைப்படத்தை இயக்கும்போது இதில் கதாநாயகனுக்கு பெரிதாக குடும்ப பின்னணி இல்லாமல் எடுத்திருப்பார் பாக்கியராஜ்.
ஆனால் கதாநாயகிக்கு குடும்ப பின்னணி. அதுவும் கூட படத்தின் இரண்டாம் பாதியில் இல்லாமல் போய்விடும். கதாநாயகன், கதாநாயகி மற்றும் அவரின் மகன் மூன்று பேரை மட்டும் வைத்தே கதை சென்று கொண்டிருக்கும். பொதுவாக தமிழ் சினிமாவில் கதை எழுதும்போது அதில் பல கதாபாத்திரங்களின் கதையை வைத்துதான் கதை செல்லும்.
பாலச்சந்தர் (K balachandar) இயக்கிய அவள் ஒரு தொடர்கதை கூட அப்படியான கதைக்களத்தைதான் கொண்டிருக்கும். அதனால்தான் அந்த திரைப்படம் அதிக வரவேற்பையும் பெற்றது. எனவே தனது திரைப்படம் வரவேற்பை பெறாமல் போய்விடுமோ என்கிற பயம் பாக்கியராஜிற்கு இருந்தது.
ஆனால் இந்த படம் வெளியான பிறகு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. ஒரு படத்தில் இரண்டே கதாபாத்திரத்தை வைத்து எடுத்தாலும் கூட படத்தின் ஓட்டமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது என்பதை அப்போது புரிந்துக்கொண்டார் பாக்கியராஜ்! இதை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்