Connect with us

என்னது நான் நாலு பொண்ணுங்க கூடவா.. அட போயா.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான பரத்!.

bharath

News

என்னது நான் நாலு பொண்ணுங்க கூடவா.. அட போயா.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான பரத்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நடிகராக இருந்த ஒரு சில நடிகர்கள் தற்போது எந்த படங்களிலும் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருப்பார்கள். அந்த வகையில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த நடிகர் பரத்.

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதன் பிறகு அவர் நடித்த ஒரு சில படங்கள் அவருக்கு நன்றாக அமையவில்லை. இதனால் பட வாய்ப்புகள் குறைந்து அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி வந்த பரத், தற்போது ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ என்னும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் பத்திரிக்கையாளரின் கேள்விக்கு கூறி இருக்கும் கருத்தானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் பரத்

தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்து வந்த பரத் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு செல்லமே என்ற திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் எடுத்தார்.

bharath

பிறகு கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு பல படங்கள் நடித்தாலும் இவருக்கு எம் மகன், வெயில், பழனி, சேவல், திருத்தணி ஆகிய திரைப்படங்கள் நன்றாக அமைந்தது.

தற்போது ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் பரத் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்

இயக்குனர் பிரசாந்த் முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ இந்த திரைப்படத்தில் பரத், அபிராமி, அஞ்சலி நாயர், ஷான், ராஜாஜி, பவித்ர லட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் கேப்டன் எம்பி ஆனந்த் தயாரித்திருக்கிறார்.

actor bharath

தற்போது வெளியீட்டிற்கு காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் நாங்கள் பல செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி இருக்கிறோம். ஆனால் எந்த ஒரு படகு குழுவிலும் இவ்வளவு ஹீரோயின்கள் நாங்கள் பார்த்ததில்லை. கீழே இருந்து பார்க்கும் எங்களுக்கே இப்படி என்றால், நீங்கள் படத்தில் நான்கு ஹீரோயின்களுடன் நடித்திருக்கிறீர்கள் உங்களுக்கு எப்படி உள்ளது என கேட்டார்.

அதற்கு பரத் படத்தில் 4 வெவ்வேறு கதைகள் இருக்கிறது. அதனால் 4 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் நடித்தது ஒரு நாயகியுடன் மட்டும் தான் என நகைச்சுவையாக பதில் கூறியிருக்கிறார்.

To Top