News
ஜெயிலரை தாண்டி மாஸ் இருக்கும் போல!.. ஹாலிவுட் கதாபாத்திரத்தில் களம் இறங்கும் பாரதிராஜா!.
ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு மாஸ் திரைப்படமாக அமைந்ததை அடுத்து அடுத்து அவர் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்திலும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாகதான் நடித்துள்ளார். அதே போல அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்திலும் இவர் போலீஸ் அதிகாரியாகதான் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
அதற்கு பிறகு வரும் ஜெயிலர் 2விலும் காவல் அதிகாரியாகதான் நடிக்கிறார். இந்த நிலையில் இவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக இதுவரை தமிழ் சினிமாவில் வராத ஒரு புது போலீஸ் கதாபாத்திரத்தில் களம் இறங்குகிறார் பாரதிராஜா.
ஹாலிவுட்டில் உண்மையை கொண்டு வரும் போலீஸ் கதாபாத்திரத்தை நிறைய திரைப்படங்களில் பார்க்கலாம். ஏ மேன் ஃப்ரம் டொரண்டோ என்கிற திரைப்படத்தில் கூட கதாநாயகன் கதாபாத்திரம் அதுவாகதான் இருக்கும்.

அதாவது ஒரு சிலரிடம் எவ்வளவு முயற்சி செய்தாலும் உண்மையை வரவழைக்க முடியாது என்று இருக்கும். அவர்களிடம் உண்மையை வாங்கும் ஸ்பெஷல் அதிகாரிகள் இருப்பார்கள். அப்படியான ஒரு கதாபாத்திரத்தில்தான் களம் இறங்குகிறார் பாரதிராஜா.
இவர்கள் கைதிகளின் கண் அசைவுகள், உச்சரிப்புகள் போன்றவற்றை வைத்தே அவர்கள் சொல்வது பொய்யா அல்லது உண்மையா என கண்டறிந்துவிடுவார்கள். ஆயிரம் பொற்காசுகள் என்கிற திரைப்படத்தை இயக்கிய ரவி முருகையா என்கிற இயக்குனர் இயக்கத்தில் புலவர் என்கிற திரைப்படம் தயாராகிறது.
இந்த திரைப்படத்தில்தான் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பாரதிராஜா வருகிறார். கதைப்படி ஓய்வு பெற்ற அதிகாரியாக பாரதிராஜா இருக்கிறார். இப்படி கைதிகளிடம் உண்மையை கொண்டு வருவதில் அவர் சிறப்பு அதிகாரியாக இருந்துள்ளார். அதை வைத்து கதை செல்கிறது.
