தப்பு என் மேல இல்ல!. விசித்ரா மீது பழிப்போட்டு தப்பிக்க பார்த்த ஆண்டவர்!. இவருக்கு தகுதி இருக்கா!.. கடுப்பான ரசிகர்கள்.

போன வாரம் பிரதீப்பை எலிமினேஷன் செய்தது முதலே பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. பிரதீப் பெண்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து நீக்கினார் கமல்ஹாசன்.

இதனையடுத்து கமல்ஹாசனை வெகுவாக விமர்சித்து வந்தனர் நெட்டிசன்கள். எனவே தன் மீது விழுந்த கறையை சரி செய்ய கமல்ஹாசன் நேற்றைய எபிசோடில் பேசி வந்தார். அதில் அவர் பேசும்போது முழுக்க முழுக்க இந்த எவிக்‌ஷனில் தன் மீது தவறில்லை என பேசியிருந்தார்.

ஆனால் அதே சமயம் பிரதீப்பிற்கு ஆதரவாக விசித்ரா பேசிய விஷயங்களை மாற்றி பேசினார் கமல்ஹாசன் என கூறப்படுகிறது. பிக்பாஸ் என்பது ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். அதில் கமல்ஹாசன முழுக்க முழுக்க நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கு நடந்த அநீதிகளுடன் பிரதீப்பை இணைத்து பேசும் அளவில் பிரதீப் தவறு செய்யவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Social Media Bar

அதே சமயம் கமல்ஹாசன் தனது அரசியல் ஆதாயங்களுக்காக இந்த மாதிரியான விஷயங்களை பேசி விசித்திரா மீது குற்றத்தை திருப்புகிறார் என்பதே மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. ஏனெனில் விசித்திராவிற்கு ஆதரவாக நிறைய பேர் இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் இன்னும் சிலர் கமல்ஹாசனே பெண்கள் விஷயத்தில் அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு நடிகர். அவர் எப்படி இந்த மாதிரியான விஷயங்களை பேசலாம். அவருடன் வாழ்ந்த கௌதமியே தன் மகளின் பாதுக்காப்பிற்காகதானே கமலை விவகாரத்து செய்தார் என ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழும்பி வருகின்றன.