ரூல்ஸை மீறினதுக்கு கமல் கொடுத்த தண்டனை – கண்ணீர் வைத்த தனலெட்சுமி

இதற்கு முன்னால் இருந்த பிக்பாஸ் போட்டியாளர்களை விட தற்சமயம் நடக்கும் பிக் பாஸ் ஆறாவது சீசனில் உள்ள போட்டியாளர்கள் அதிக கோபக்காரர்களை போல இருப்பதாய் தெரிகிறது.

இந்த போட்டியில் வந்த நாள் முதலே அசிம் மற்றும் தனலெட்சுமி சற்று பிரபலமான போட்டியாளராக இருக்கின்றனர். கமல்ஹாசனின் அறிவுரைக்கு பிறகு கடந்த இரு வாரங்களாக அசிம் தனது கோபத்தை ஓரளவு குறைத்து சற்று சாந்தமாக விளையாடினார்.

அதே போல தனலெட்சுமி அதிகமாக கோபப்படுகிறார் என அவருக்கும் போன வாரம் அறிவுரை கூறினார் கமல். ஆனால் இந்த வாரமும் கூட தனலெட்சுமி அதிக கோபத்தை வெளியிட்டார்.

கேமிரா முன்பு வந்து இருமுறை பிக்பாஸிடமே சண்டையிட்டார். இதனால் நாமினேஷனில் சேஃப் சோனில் இருந்த தனலெட்சுமியிடம் அதை பறித்து விக்ரமனிடம் கொடுத்தார் கமல்.

இதனால் கண்கலங்க துவங்கினார் தனலெட்சுமி. அப்போதும் கூட கமல்ஹாசன் அவருக்கு ஆறுதலையே வழங்கி வந்தார்

வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

Refresh