Connect with us

உன் இஷ்டத்துக்கு சமைச்சு தர முடியாது.. ப்ரதீப்தான் அடுத்த அஸீம்! – ரணகளமாகும் BiggBoss வீடு!

big boss season 7 pradeep vijay

Bigg Boss Tamil

உன் இஷ்டத்துக்கு சமைச்சு தர முடியாது.. ப்ரதீப்தான் அடுத்த அஸீம்! – ரணகளமாகும் BiggBoss வீடு!

உன் இஷ்டத்துக்கு சமைச்சு தர முடியாது.. ப்ரதீப்தான் அடுத்த அஸீம்! – ரணகளமாகும் BiggBoss வீடு!

Social Media Bar

சண்டைக்கும், சச்சரவுக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளே சண்டைக்கு மேல் சண்டையாக நடந்து வருகிறது. ஏற்கனவே ஹவுஸ்மேட்ஸ் 6 பேர் சின்ன வீட்டில் தங்க வைக்கப்பட்டு சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்ய வைக்கப்பட்டுள்ளதால் அப்செட்டில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வார டீம் லீடரான விஜய்க்கும், ப்ரதீப்புக்கும் மோதல் எழுந்துள்ளது. சாப்பாடு மெனுவில் குருமா சேர்க்கும்போது என்னிடம் கேட்கவில்லை என ப்ரதீப் சொல்ல, ‘சும்மா துண்டு ஆட்டிக்கிட்டு உக்காந்துட்டு இருக்க ஆட்கள் கிட்ட என்ன சமைக்கணும்னு கேக்க முடியாது’ என விஜய் பதிலடி தர அந்த கடுப்பை சின்ன வீட்டுக்காரர்களிடம் காட்டியுள்ளார் ப்ரதீப்.

எனக்கு பிடிச்சதை சமைச்சு குடுங்க என ப்ரதீப் கேட்க, டீ, ஸ்னாக்ஸ்தான் நீங்க கேக்குறப்போ எல்லாம் தர முடியும். சாப்பாடு உங்க இஷ்டத்துக்கு கேக்குறப்போ எல்லாம் செஞ்சு தர முடியாது என சின்ன வீட்டு நெக்ஸன் பதிலுக்கு பொங்கி தள்ளிவிட்டார். இதனால் கடுப்பான ப்ரதீப் நான் வாங்கி குடுத்த மளிகை சாமான்களை எல்லாம் குடுங்க என பஞ்சாயத்தில் குதித்திருக்கிறார்.

ஏற்கனவே விசித்திராவுடனும் ப்ரதீப்புக்கு சண்டை இருக்கும் நிலையில் தானாக போய் ஒவ்வொருவரிடமும் பிரச்சினை செய்து வருவதால் இவர்தான் இந்த சீஸனின் அசீம் போல என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top