Connect with us

ப்ரோவோ என்ன பண்ணாருன்னு தெரியல!.. டைட்டில் வின்னர் விக்ரமால் கடுப்பான ரசிகர்கள்!..

bigg boss vikram

Bigg Boss Tamil

ப்ரோவோ என்ன பண்ணாருன்னு தெரியல!.. டைட்டில் வின்னர் விக்ரமால் கடுப்பான ரசிகர்கள்!..

Social Media Bar

Vikram saravanan in Tamil Big boss: கடந்த வாரம் மாயாவின் தலைமையில் பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனைகளே மக்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. உண்மையில் கேப்டன் ஆவதற்கு முன்பு மாயாவே சுறுசுறுப்பில்லாத போட்டியாளராகதான் இருந்தார்.

ஆனால் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு அவருக்கு கேப்டனாக இருப்பது உதவியாக இருந்தது. அதன் மூலம் தற்சமயம் அனைவரும் அறிந்த போட்டியாளராக மாயா இருக்கிறார்.

ஆனால் கேப்டனாகவே ஆக்கினாலும் ஒன்றுமே செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவர்தான் போட்டியாளர் விக்ரம் சரவணன். இவர் கேப்டனாக இருந்தப்போது தொடர்ந்து பிக்பாஸிடம் கேள்விகள் கேட்டு அவரையே கதறவிட்டு கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வாரம் எவிக்‌ஷனுக்கு விக்ரம் ஆர்.ஜே ப்ராவோவை கூறியப்போது, ப்ரோவோ வந்து இரண்டு வாரம் ஆகிறது. ஆனால் அவர் எதுவுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார். இந்த காரணத்தை கேட்டு கடுப்பான ரசிகர்கள் வந்து இத்தனை வாரம் ஆகுது. நீங்களே இன்னும் ஒன்னும் பண்ணலை அதுக்குள்ள அவரை குறை சொல்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

To Top