Connect with us

1000 கோடியை விட்டுட்டு விஜய் வராருனா என்ன அர்த்தம்!.. விஜய் அரசியல் குறித்து சந்தேகமா இருக்கு!..

thalapathy vijay

News

1000 கோடியை விட்டுட்டு விஜய் வராருனா என்ன அர்த்தம்!.. விஜய் அரசியல் குறித்து சந்தேகமா இருக்கு!..

Social Media Bar

Actor Vijay : விஜய் அரசியலுக்கு வந்தார் என்கிற விஷயமே ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி இருக்கிறது. இதற்கு இரண்டு விதமான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகளை பொறுத்தவரை விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை அவர்கள் வரவேற்கவே செய்கின்றனர்.

ஆனால் சினிமா வட்டாரத்திலும் விமர்சனர்களும் கூறும் பொழுது விஜய் அரசியலுக்கு வருவது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது என்று கூறுகின்றனர். ஏனெனில் பெரும்பாலான நடிகர்கள் தங்களது பாதுகாப்புக்காகவே அரசியலுக்கு வருவதை வேலையாக கொண்டிருக்கின்றனர்.

ஆனால் விஜய்யை பொருத்தவரை சினிமாவை விட்டுவிட்டு முழு நேரமாக அரசியலுக்கு வருகிறார். அதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்கிற கேள்வி இருக்கிறது. கேப்டன் விஜயகாந்த் கூட அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்துவிட்டு அதன் பிறகு தான் அரசியலுக்கு வந்தார்.

Thalapathy-vijay
Thalapathy-vijay

ஆனால் விஜய்யை பொருத்தவரை விஜயகாந்த் அளவிற்கு அவர் பெரிதாக எதுவும் நன்மைகளை செய்தது கிடையாது. ஆனால் நூறு கோடி சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக விஜய் இருக்கிறார். அரசியலுக்கு வரப்போவதாக கூறிய பிறகுதான் மக்களுக்கு சில நன்மைகளை செய்திருக்கிறார் விஜய்.

அப்படி ஒரு வேளை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தால் இவ்வளவு நாட்கள் நிறைய நன்மைகளை செய்திருக்கலாமே என்று சிலர் கேள்வி எழுப்பி வந்தாலும் விஜய் ரசிகர்கள் இது குறித்து கூறும் பொழுது விஜய் ஏற்கனவே நிறைய நன்மைகள் செய்திருக்கிறார் ஆனால் அதையெல்லாம் அவர் வெளியில் கூறியதில்லை என்று கூறுகின்றனர்.

Vijay-Thalapathy
Vijay-Thalapathy

இந்த நிலையில் இது குறித்து பேசிய வலைப்பேச்சு பிஸ்மி கூறும் பொழுது விஜய்க்கு ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 250 கோடி சம்பளம் கிடைக்கிறது இப்பொழுது அவர் இரண்டு வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்தால் அதன் மூலமாக அவருக்கு ஆயிரம் கோடி நஷ்டமாகும். இந்த ஆயிரம் கோடி நஷ்டத்தையும் அவர் விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்கிறேன் என வருவது நம்பும்படியாக இல்லை. இதற்கு பின்னால் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று தோன்றுகிறது எனக் கூறியிருக்கிறார் பத்திரிக்கையாளர் பிஸ்மி.

Articles

parle g
madampatty rangaraj
To Top