என்னென்ன சொல்றாரு பாருங்க –  சிவகார்த்திகேயனை கலாய்த்த ப்ளு சட்டை மாறன்

தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்த்திகேயன். காமெடி கதாநாயகன் என்கிற பானியில் சினிமாவிற்குள் வரும் பலரும் ஒரு கமர்ஷியல் கதாநாயகன் நிலையை எட்டி விடுவதில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் தனது படங்களில் காமெடிகளை கொண்டிருந்தாலும், ஒரு கமர்ஷியல் கதாநாயகன் நிலையை அடைந்துவிட்டார் என்றே கூறலாம்.

தற்சமயம் இவர் நடித்து வெளியான டான் திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் ஆரம்பம் முதலே பயங்கரமான ரஜினி ரசிகர் ஆவார். ரஜினியும் கூட டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை பாராட்டியிருந்தார்.

இன்றோடு ரஜினி அவர்களின் சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. ரஜினியின் சினிமா வாழ்க்கையில் சிவாஜி ஒரு முக்கியமான படமாகும். இதுப்பற்றி சிவகார்த்திகேயன் கூறும்போது, “நான் சிவாஜி படத்தை 15 தடவைக்கு மேல் திரையரங்கில் பார்த்துள்ளேன். அவரின் ஸ்டைல் மற்றும் நடை இரண்டுமே அற்புதமாக இருக்கும். இப்படி ஒரு அற்புதமான படத்தை அளித்ததற்கு சங்கர் சாருக்கும், ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கும் நன்றி” என கூறியிருந்தார்.

இந்நிலையில் யூ ட்யூப் பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இதை கலாய்த்து மீம் ஒன்றை தயார் செய்து போட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Refresh