News
விக்ரம் படத்திற்கு கமல் உங்களுக்கு என்ன கொடுத்தார்..? – அனிரூத் அளித்த சுவாரஸ்யமான பதில்
கடந்த ஜூன் 3 அன்று கமல் தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம் விக்ரம், இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளே மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் பகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதன் அடுத்த பாகத்தில் சூர்யா முக்கிய வில்லனாக வருவதாக கூறியிருந்ததால் படத்திற்கு மக்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்ப்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்திருந்தது.
கமல் தயாரிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் சாதனை படைத்த படமாக விக்ரம் இருப்பதால், படத்தில் பணிப்புரிந்த பலருக்கும் அவர் பரிசுகளை வழங்கு வந்தார். அந்த வகையில் இயக்குனர், உதவி இயக்குனர்கள், மற்றும் நடிகர் சூர்யா ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினார் கமல்.

இந்நிலையில் சமீபத்தில் கேரளாவில் ஒரு பேட்டி நடந்தது. அந்த பேட்டியில் அனிரூத்திடம் படத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளதே! உங்களுக்கு என்ன பரிசு வழங்கப்பட்டது? என கேட்கப்பட்டது. அதற்கு அனிரூத் விக்ரம் படம் எனக்கு அளித்ததே அவர் தந்த பரிசுதான் என கூறியுள்ளார்.
