Connect with us

ரஞ்சித் இந்த படத்தை காபியடிச்சி எடுத்துருக்கார்… அதுவும் நயன்தாரா பட இயக்குனர்கிட்ட.. வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன்!.

Pa. Ranjith

News

ரஞ்சித் இந்த படத்தை காபியடிச்சி எடுத்துருக்கார்… அதுவும் நயன்தாரா பட இயக்குனர்கிட்ட.. வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன்!.

Social Media Bar

சினிமாவில் பல முக்கிய கதைகளை மையமாக வைத்து படமாக எடுத்து வருபவர் இயக்குனர் பா. ரஞ்சித். தற்போது திரைப்பட விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் பா. ரஞ்சித் பற்றிய ஒரு சர்ச்சையான தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

படத்தைப் பற்றிய விமர்சனங்களை எந்த ஒரு பயமும் இல்லாமல் தைரியமாக கூறும் ப்ளூ சட்டை மாறன் தற்போது இயக்குனர் பற்றிய சர்ச்சையான விஷயம் ஒன்றை கூறி இருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குனர் பா. ரஞ்சித்

பா. ரஞ்சித் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தார். மேலும் அவரை பலருக்கும் அடையாளம் காணப்பட்டது மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தான்.

பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து காலா, கபாலி என்ற இரு படங்களை இயக்கினார். மேலும் இந்த இரு படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததை தொடர்ந்து பா. ரஞ்சித் நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் என்ற திரைப்படத்தை எடுத்து தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

pa ranjith

இவர் மேடைகளில் பேசும் போது, செய்தியாளர்கள் சந்திப்பு ஆகியவற்றின் மூலம் தன்னுடைய கருத்தை தெரிவிப்பதால் ரசிகர்களின் மத்தியில் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது பா. ரஞ்சித் மீது பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஒரு சர்ச்சை கிளப்பி இருக்கிறார்.

காப்பி அடித்த பா. ரஞ்சித்

முன்னதாக விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி திரைப்படம் கோபி நயனாரின் கதையை திருடி ஏ ஆர் முருகதாஸ் திரைப்படமாக இயக்கியிருந்தார் என ப்ளூ சட்டை மாறன் பேசியது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுபோல பா. ரஞ்சி இயக்கிய மெட்ராஸ் திரைப்படமும் காபி தான் என கூறியிருக்கிறார். அறம் திரைப்படத்தை இயக்கிய கோபி நயனார் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் அடுத்ததாக எடுக்க இருந்த திரைப்படத்தை தான் பா. ரஞ்சித் நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற படத்தை இயக்கி வெளியிட்டு இருக்கிறார் என்ற தகவலை கூறியிருக்கிறார்.

madras movie

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் கூறும் போது கோபி நயனார் கருப்பர் நகரம் என்ற ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டு இருந்தார். அந்த திரைப்படம் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஹவுசிங் போர்டு அதில் உள்ள ஒரு சுவர் பற்றியும் ஃபுட்பால் பற்றிய படமாகும்.

கருப்பர் நகரம் படத்தை இயக்கிய போது அந்த படத்தில் நடிகராக நடிக்க இருந்த அகில் என்ற நடிகரின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக படம் தள்ளிப்போனது. ஆனால் அந்த சமயத்தில் அட்டகத்தி திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியிருந்தார். மேலும் அந்த படம் முடிந்த உடனே இந்த கதையை அப்படியே காப்பி அடித்து மெட்ராஸ் திரைப்படம் என படம் ஆக்கினார் ப்ளூ சட்டை மாறன் என கூறியிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top