News
நைட்டு முழுக்க நடு ரோட்டுல நிக்க வச்சிட்டாங்க!.. கையில் இருந்த காசை பிடுங்கி பாபி சிம்ஹாவை ஏமாற்றிய சினிமாக்காரர்!..
தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் தற்போது பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடையே பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாபி சிம்ஹா.
பாபி சிம்ஹா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். காதலில் சொதப்புவது எப்படி? பீட்சா ஆகிய திரைப்படங்களில் ஒரு சில நிமிடங்கள் மட்டும் தோன்றிய பிறகு, சூது கவ்வும் படத்தில் கடத்தல் காரனாகவும், அல்போன்ஸ் புத்திரனின் நேரம் படத்தில் நகைச்சுவை வில்லனாகவும் நடித்து மக்களிடையே பிரபலமானார்.
இந்நிலையில் தான் சினிமாவில் முதன் முதலில் நடிக்க வரும் போது நடந்த சம்பவத்தை பற்றி பாபி சிம்ஹா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் பாபி சிம்ஹா
ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா திரைப்படத்தில் மதுரை கேங்ஸ்டர் சேதுவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டு பெற்ற நிலையில், சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றார்.

பாபி சிம்ஹா நடிகை ரேஷ்மி மேனன் உடன் கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பல படங்களில் அவருக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது. தற்போது அவர் படங்களில் நடித்து வரும் வேளையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கும் கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏமாற்றப்பட்ட பாபி சிம்ஹா
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பாபி சிம்ஹா, சென்னையில் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அதனால் நானும் என்னுடைய நண்பன் சரவணனும் வந்திருந்தோம். அப்போது அவர்கள் எங்களை கேகே நகரில் இறக்கிவிட்டு எங்களிடம் இருந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு விட்டு, நாங்கள் அங்கு சென்று சீரியலின் ஏற்பாடுகளை முதலில் செய்கிறோம். நீங்கள் இங்கே இருங்கள் என்று கூறி விட்டு சென்று விட்டார்கள்.
ஆனால் அவர்கள் திரும்பி வரவே இல்லை. கையில் காசு இல்லாமல் இரவு முழுவதும் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்திருந்தேன். அதன் பிறகு ஈ ராம்தாஸ் சார் நினைவுக்கு வந்தார். உடனே அவருக்கு போன் செய்து நான் இதுபோல கேகே நகரில் இருப்பதாக கூறினேன். அவரும் கேகே நகர் பக்கத்தில் அப்பார்ட்மெண்டில் தான் வசித்தார். உடனே அவர் அங்கு வந்து கையை காட்டி போனை கட் செய்து விட்டு இங்கு வா என்று கூறினார்.
நான் நடந்தவற்றை கூறினேன். என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று உடனே அவர் டீ, டிபன் எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு, கையில் 200 ரூபாய் பணம் கொடுத்து இதுபோல் சினிமாவிற்குள் வரக்கூடாது. முதலில் தங்குவதற்கு இடம் பார்க்க வேண்டும். அதன் பிறகு வாழ்வதற்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்துவிட்டு, கிடைக்கும் விடுமுறை நாளில் தான் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைய வேண்டும் என கூறி அனுப்பி வைத்தார் என பாபி சிம்ஹா தெரிவித்து இருக்கிறார்.
