ரயிலில் ஃபுட் போர்டு அடித்த பாலிவுட் நடிகர் – எச்சரித்த இந்தியன் ரயில்வே!

பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல மொழிகளில் படம் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் சோனு சூட். கொரோனா காலக்கட்டத்தில் இவர் மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார்.

தமிழில் விஜயகாந்த் படங்களில் இவரை வில்லனாக பார்க்கலாம். இது இல்லாமல் ஒஸ்தி படத்தில் சிம்புவிற்கு வில்லனாக நடித்துள்ளார். புகழ்ப்பெற்ற தெலுங்கு படமான அருந்ததி படத்திலும் கூட இவரே வில்லனாக நடித்துள்ளார்.

தொடர்ந்து அனைத்து சினிமாக்களிலும் வாய்ப்புகளை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இரயில் பயணம் செய்த சோனு அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

அதில் அவர் ஓடும் ரயிலில் படிக்கட்டிற்கு அருகே நின்று பயணம் செய்திருந்தது தெரிந்தது.

இதை கவனித்த இந்தியன் ரயில்வே சோனு சூட்டிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுக்குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இந்தியன் ரயில்வே “சோனு சூட் நீங்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்வது என்பது ஆபத்தான விஷயமாகும். இந்த வகையான வீடியோக்களை நீங்கள் வெளியிடுவது உங்கள் ரசிகர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லலாம். எனவே பாதுக்காப்பான பயணத்தை செய்யவும்” என கூறியுள்ளது.

சோனு சூட் வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்

Refresh