Tamil Cinema News
இறந்த பிறகு மனைவியின் ஆசையை நிறைவேற்றிய ஸ்ரீதேவி கணவர்…
நடிகை ஸ்ரீதேவி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானாலும் கூட தமிழை விட அவருக்கு ஹிந்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.
மேலும் அப்போதைய கால கட்டங்களில் தமிழ் சினிமாவை விடவும் பாலிவுட் சினிமா வளர்ச்சி பெற்ற சினிமாவாக இருந்தது. இதனை அடுத்து பாலிவுட்டில் வாய்ப்பை பெற்று நடிக்க தொடங்கினார் ஸ்ரீதேவி.
அப்பொழுது பாலிவுட்டில் தயாரிப்பாளராக இருந்த போனி கபூர் என்பவருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி. பிறகு வட இந்தியாவிலேயே அவர் செட்டிலாகி விட்டார்.
இந்த நிலையில் ஸ்ரீதேவி இறப்புக்கு பிறகு அவரது ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் போனி கபூர். போனி கபூரின் ஹேர் ஸ்டைல் மற்றும் உடல் எடையை குறைக்குமாரு உயிரோடு இருக்கும் பொழுதே ஸ்ரீதேவி கூறி வந்திருந்தார்.
இந்த நிலையில் அவர் உயிரோடு இருக்கும் பொழுது முடியை மாற்றிக் கொண்டார் போனி கபூர் இந்த நிலையில் தற்சமயம் கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி உடல் எடையையும் குறைத்து இருக்கிறார் போனி கபூர்.
