Tamil Cinema News
நிறைய பெண்களை காதலிச்சேன்.. வாழ்க்கையே போச்சு.. நடிகர் மணிகண்டன் ஓப்பன் டாக்.!
சினிமாவில் அறிமுகமாகும் எல்லா நடிகர்களுக்குமே சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்துவிடுவதில்லை. இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் நிறைய பேர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள்.
அதில் நடித்த பரத், சித்தார்த் மாதிரியான நடிகர்கள் பெரிய நடிகர்களாக பிறகு மாறினார்கள். ஆனால் அவர்கள் நண்பர்களாக நடித்த நடிகர் மணிகண்டனுக்கு மட்டும் பெரிதாக வரவேற்பு என்பதே கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் கொஞ்ச காலங்களிலேயே சினிமாவில் இருந்து விலகினார்.
இந்நிலையில் அவர் ஒரு பேட்டியில் இதுக்குறித்து கூறியுள்ளார். அதில் பேசிய மணிகண்டன் பாய்ஸ் படத்திற்கு பிறகு கிச்சா வயது 16, யுகா மாதிரியான படங்களில் நடித்தேன். யுகாவில் நடித்து வந்தப்போது என் தந்தை இறந்துவிட்டார்.
அவர் நிறைய கடன் வாங்கி இருந்தார். அதனால் நான் வேலைக்கு போக வேண்டி இருந்தது. நான் நிறைய பெண்களை காதலித்துள்ளேன். இப்போது எனக்கு 42 வயதாகிறது. ஒரு மலேசிய பெண் என்னை காதலித்தார்.
அவருடன் நான் மலேசியா சென்றேன். அங்கே நிறைய தொல்லைகளை அனுபவித்தேன். எப்படியோ அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன் என கூறியுள்ளார் மணிகண்டன்.
