News
விடாமல் வேட்டையாடிய தமிழ் பிரபலங்கள்.. யாரும் அறியாத நயன்தாராவின் கண்ணீர் பக்கங்கள்!.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் நம் அனைவருக்கும் தெரியும். அதே லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்றால் சொல்லவே தேவையில்லை. அனைவரும் உடனே நயன்தாரா என கூறுவோம். அந்த அடைமொழிக்கு ஏற்றவாறு உண்மையில் அவர் சூப்பர் ஸ்டார் தான். அவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த காலம் முதல், தற்பொழுது வரை அவரின் மார்க்கெட்டை இன்னும் ரசிகர்களிடம் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் சாதித்து தற்பொழுது வரை முன்னணி நடிகையாக இருப்பது என அவர் கடந்து வந்த பாதையை பார்த்தால் சற்று கண்ணீர் வரத்தான் செய்யும். அந்த வகையில் நடிகை நயன்தாரா சினிமாவில் கடந்து வந்த பாதையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை நயன்தாரா
இவரை நயன்தாரா என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவரின் உண்மையான பெயர் டயானா மரியா குரியன். நயன்தாரா முதன்முதலில் மனசினகாரே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தான் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
சினிமாவில் எப்பொழுதும் நடிகர்களை மட்டுமே முக்கியமாக வைத்து தான் படம் எடுக்கப்படும். ஆனால் நயன்தாரா சற்று வித்தியாசமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருந்தார்.

இதனால் அவர் கடந்த 2010 முதல் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார். மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட நயன்தாரா கேரளா மாநிலத்தில் பிறந்தார். நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பழமொழிகளில் நடித்திருக்கிறார். பல முன்னணி தமிழ் ஹீரோக்களுடன் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த ஒரு நடிகை என்றால் அது நயன்தாரா தான்.
நயன்தாராவை ஏமாற்றிய பிரபலங்கள்
சினிமாவில் எப்பொழுதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. காதல் கிசுகிசு போன்ற பல சர்ச்சைகள் எப்பொழுதும் வந்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் அதில் நயன்தாராவும் ஒரு காலத்தில் சிக்கியிருந்தார் என்பதுதான் உண்மை.
காதல் கிசுகிசு என்றால் அப்பொழுதெல்லாம் நயன்தாரா பெயர் வராமல் இருந்ததில்லை அந்த அளவிற்கு அவரின் பெயரை டேமேஜ் செய்து வந்தார்கள்.
இந்நிலையில் தான் சினிமா பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் நயன்தாரா மீதான தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். அதில் நடிகை நயன்தாரா தற்பொழுது ஒரு முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் என்றால் அவர் கடந்து வந்த பாதை மலர் பாதை அல்ல என கூறியிருக்கிறார்.
நயன்தாராவை ஏமாற்றிய பல பிரபலங்களை நமக்கு தெரியும் குறிப்பாக பிரபுதேவா, சிம்பு, மோகன்லால் போன்ற பல நடிகர்கள் நயன்தாராவை ஏமாற்றி இருக்கிறார்கள்.
ஆனால் தற்பொழுது வரை அவர்கள் யாரையும் பற்றி பேசாமல் நயன்தாராவை மட்டும் தான் பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவது தவறு என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
