Tamil Cinema News
படிப்பறிவு இல்லையா?.. ஜோதிகாவை மோசமாக பேசிய பிரபலம்.. இதெல்லாம் சொல்லி இருக்க கூடாது.!
சமீபத்தில் கங்குவா திரைப்படம் குறித்து நடிகை ஜோதிகா வெளியிட்ட பதிவு அதிக வைரலாகி வந்தது. அந்த பதிவில் ஜோதிகா கூறும்பொழுது படத்தில் முதல் அரை மணி நேரம் மட்டும் கொஞ்சம் மெதுவாக சென்றது.
மற்றபடி படம் நன்றாகதான் இருக்கிறது என்று கூறி இருந்தார். மேலும் அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் வந்த மற்ற படங்களோடு ஒப்பிடும் போது இந்த திரைப்படம் நன்றாகதான் இருக்கிறது என்று பேசி இருந்தார்.
இந்த நிலையில் நடிகை ஜோதிகாவின் அந்த பதிவு அதிக பிரபலம் அடைந்து வந்தது. ஒரு பக்கம் இந்த பதிவிற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் மற்றொரு பக்கம் இந்த பதிவு குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஜோதிகாவை பேசிய பிரபலம்:
ஆனால் நெட்டிசன்கள் பேசியதை விடவும் மிக மோசமாக ஜோதிகா குறித்து பாடகி சுசித்ரா பேசியிருக்கிறார். பாடகி சுசித்ரா தொடர்ந்து தமிழ் சினிமாவில் சர்ச்சையான விஷயங்களை பேசி வரும் பிரபலமாக இருந்து வருகிறார்.
பெரும்பாலும் அவர் பேசும் விஷயங்கள் பிரபலங்களின் அந்தரங்க விஷயமாகவே இருக்கும். ஆனால் இந்த முறை ஜோதிகா குறித்து பேசும்பொழுது அவருடைய அந்த பதிவு குறித்து மிக மோசமாக பேசியிருக்கிறார்.
ஜோதிகா அந்த பதிவை எழுதும் பொழுது அதில் தவறான ஆங்கிலத்தில் எழுதி இருப்பதாக பேசியிருந்தார் சுசித்ரா. மேலும் முதலில் போய் படிச்சிட்டு வர சொல்லுங்க படிப்பறிவு இல்லையா? என்றெல்லாம் ஜோதிகா மோசமாக பேசியிருந்தார் சுசித்ரா. இந்த நிலையில் சுசித்ராவின் இந்த வீடியோ வைரலாக தொடங்கி இருக்கிறது.
