Tamil Cinema News
எனக்கும் வெங்கடேஷ் பட்க்கும் இருந்த சண்டை… வெளிப்படையாக கூறிய செஃப் தாமு.!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் அதிக பிரபலமடைந்தனர். அவருக்கு முன்பு விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் சில டிவி சேனல்களில் சமையல் நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் சன் டிவியில் புதிதாக குக் வித் கோமாளி மாதிரியே ஒரு நிகழ்ச்சியை துவங்கிய காரணத்தினால் வெங்கடேஷ் பட் அந்த சேனலுக்கு சென்றார்.
இந்த நிலையில் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக விஜய் டிவியில் மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.
இந்த நிலையில் இதற்கு தாமு பதில் அளித்திருக்கிறார். அவர் கூறும் பொழுது டிவி சேனலில் மாறியதுனால் எல்லாம் எங்களுடைய நட்பு பிளவுப்படவில்லை இன்னமும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். சமீபத்தில் கூட ரம்யா பாண்டியனின் திருமணத்தில் நான் வெங்கடேஷ் மாதம்பட்டி ரங்கராஜ் மூவருமே அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம்.
மாதம்பட்டி ரங்கராஜ் தான் அன்று சமையலை கவனித்துக் கொண்டிருந்தார் அவர் தான் எங்களுக்கு உணவுகளை பரிமாறினார். என்று அந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார் தாமு.
