Tamil Cinema News
எந்திரன் பட ரோபோவை நிஜமாக்கிய சீனா.. புது ஏ.ஜி.ஐ தொழில்நுட்பம்..!
ஏ.ஐ தொழில்நுட்பம் ஒரு பக்கம் ஆக்கபூர்வமானதாக பார்க்கப்பட்டாலும் கூட இன்னொரு பக்கம் ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்ந்து பலருக்கும் பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
என்றாவது ஒருநாள் ஏ.ஐ தொழில்நுட்பம் மனிதர்களை மிஞ்சிய ஒரு ஆற்றலை பெறும். அன்று மனிதர்களுக்கு எல்லாம் வேலைகள் இல்லாமல் போய்விடும் என்பது பலரது கவலையாக இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து இன்னும் பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்த வகையில் தான் ஏ.ஐ யின் அடுத்த ஒரு பாய்ச்சலாக சீனா புதிதாக ஏ.ஜி.ஐ என்கிற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
எந்திரங்களை மனிதர்கள் போலவே சிந்திக்க வைக்கும் புது தொழில் நுட்பம் தான் ஏஜிஐ. ஏற்கனவே கூகுள் லேம்டா என்கிற ஒரு செயற்கை நுண்ணறிவை உருவாக்கி அதன் பிறகு அதை வெளியிடவே இல்லை.
அது மனிதர்களை போல சிந்திக்க துவங்கியது தான் அதற்கு காரணம் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஏ.ஜி.ஐ என்கிற இந்த தொழில்நுட்பம் எதற்கு உதவும் என்பதற்கு சீனா சில நியாயமான காரணங்களை முன்வைக்கிறது.
அதாவது ரோபோ எந்திரங்களுக்கு இந்த ஏஜிஐ தொழில்நுட்பத்தை செலுத்துவதன் மூலமாக மனிதர்கள் போலவே அவை சிந்திக்கும் உதாரணத்திற்கு வீட்டில் கீழே பால் கொட்டி விட்டது என்றால் அதை துடைக்க வேண்டும் என்கிற அறிவு மனிதர்களுக்கு இருப்பது போலவே அந்த ரோபோட்டுக்கும் இருக்கும்.
இதனால் மனிதர்களின் வேலைகள் எளிமையாகும் என்று கூறப்படுகிறது ஆனாலும் கூட மனிதர்களைப் போலவே எந்திரங்கள் சிந்திப்பது என்பது எதிர்காலத்தில் என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என இப்பொழுது மக்கள் இது குறித்து அச்சப்பட துவங்கியிருக்கின்றனர்.
ஆனால் சீனா தொடர்ந்து இந்த தொழில்நுட்பத்தில் ஈடுபாடு காட்டி வருகிறது
