லியோ படத்திற்கு திருட்டு தனமாக இரவில் டப்பிங்! ஆர்டிஸ்டுடன் சிக்கிய லோகேஷ்!

நடிகர் விஜய் நடித்து மெகா ஹிட் அடித்த லியோ படத்திற்கு திருட்டு தனமாக டப்பிங் கொடுத்த  ஆர்டிஸ்ட்டை, டப்பிங் யூனியன் சங்க காம்பவுண்டுக்குள் கூட விட மாட்டோம் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியான லியோ படத்தில், திரிஷா, அர்ஜுன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். 

இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த திரிஷாவிற்கு பாடகி சின்மயி டப்பிங் பேசியுள்ளார்.  தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும்  கன்னடத்திலும் சின்மயி தான் திரிஷாவுக்கு டப்பிங் பேசியுள்ளார். 

டப்பிங் சங்க உறுப்பினராக இல்லாத சின்மயி டப்பிங் கொடுப்பதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தாலும், கனகராஜ் நம்பிகை ஊட்ட சின்மயியும் வாய்ஸ் கொடுத்து விட்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு டப்பிங் கொடுத்த சந்தோசத்தில், இதை பற்றி எக்ஸ் வலைதளத்தில் சின்மயி பகிர்ந்துள்ளர். இதைப் பார்த்து காண்டான  டப்பிங் சங்கம் லோகேஷ் கனகராஜ்க்கு அபராதம் விதிக்க, அதை அவரும் அடைத்து விட்டார். 

Social Media Bar

இந்த நிலையில், தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்  தலைவர் பதவிக்கு  வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நடிகர் ராதாரவியிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒரு திருடன் எப்படி இரவில் வந்து திருடுவானோ அப்படி, சின்மயி இரவில் வந்து டப்பிங் பேசியுள்ளதாகவும் இந்த டப்பிங் யூனியனில் வர அவருக்கு தகுதியே இல்லை எனவும் , மீண்டும் டப்பிங் யூனியனுக்கு வந்தால் நிச்சயமாக அந்த காம்பவுண்டுகள் கூட சேர்க்க மாட்டோம் எனவும் பதிலளித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.