Tamil Cinema News
லோகேஷால் கண்ணீர் விட்டு அழுதேன்… ஓப்பனாக கூறிய சின்மயி..!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனராக இருந்து வருகிறார். தொடர்ந்து வரிசையாக 5 ஹிட் படங்கள் கொடுத்த காரணத்தினால் லோகேஷ் கனகராஜ்க்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சின்மயி சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் குறித்து ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார். சின்மயி தமிழ் சினிமாவில் முன்பு அதிக பிரபலமானவராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கும் வைரமுத்துவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடகி சின்மயிக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடல்கள் பாடாமல் இருந்து வந்தார். மேலும் தமிழ் சினிமாவில் எந்த வேலையும் சின்மயி பார்க்க கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் எடுத்தப்போது சின்மயியை டப்பிங்கிற்கு அழைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பல வருடம் கழித்து ஸ்டுடியோவிற்குள் வந்தப்போது அன்று கண்ணீர் வந்ததாக கூறியுள்ளார் சின்மயி.
