Tamil Cinema News
ஏ.ஐ பயன்படுத்துறது கத்தி வீசுற மாதிரி… நான் பயப்பட மாட்டேன்.. கமல்ஹாசன்.!
தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான நடிகர்களில் கமல்ஹாசன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று கூறலாம். திரைப்படத்தில் நடிப்பது என்று மட்டுமில்லாமல் பல துறைகளிலும் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் கமல்ஹாசன்.
பாடல்கள் பாடுவது பாடல் வரிகள் எழுதுவது துணை இயக்குனராக பணிபுரிதல் என்ற பல விஷயங்களை கமல்ஹாசன் செய்திருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் ஏ.ஐ தொழில்நுட்பம் சினிமா துறையிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
நிறைய விஷயங்களை ஏ.ஐ கொண்டு எளிதாக செய்ய முடிகிறது. எனவே அது குறித்து பலருக்கும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. கமல்ஹாசன் கூட சமீபத்தில் இதுக் குறித்து படிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று இருந்தார். இந்த நிலையில் அவரிடம் ஏ.ஐ குறித்து கேட்ட பொழுது அவர் அளித்த பதில் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.
அதில் அவர் கூறும் பொழுது ஒவ்வொரு முறை புதிதாக ஒன்று வரும் பொழுதும் மக்கள் பயந்தார்கள். பிரஸ் என்கிற முறை வந்த பொழுது கையால் எழுதுபவர்களுக்கு வேலை போய்விடும் என்று நினைத்தார்கள். கார் வந்தபொழுது மாட்டுவண்டிக்கு வேலையில்லாமல் போய்விடும் என்று நினைத்தார்கள்.
ஆனால் மாடு ஓய்வு எடுக்கும் என்பது குறித்து அவர்கள் யோசிப்பதில்லை எனவே புதிதாக ஒரு தொழில்நுட்பம் வரும் பொழுது எப்பொழுதும் பயந்து கொண்டுதான் இருக்கிறார்கள். என்னை கேட்டால் அப்படி எல்லாம் எந்த தொழில் நுட்பத்திற்கும் பயப்படத் தேவையில்லை நாம் அதை தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும் அதை கட்டுப்படுத்த முடிய வேண்டும் என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.
