Tamil Cinema News
பாலிவுட்டில் இந்த விஷயத்தை தாங்கிக்க முடியாது.. ஓப்பன் டாக் கொடுத்த சிம்ரன்..!
நடிகை சிம்ரன் என்னதான் கோலிவுட் நடிகையாக இருந்தாலும் அவர் ஹிந்தி சினிமாவில் இருந்துதான் தமிழுக்கு நடிக்க வந்தார். ஹிந்தி ரேடியோ சேனலில் தொகுப்பாளராக பேசி வந்த சிம்ரனுக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு இப்பொழுது வரை தமிழ் சினிமாவில் நடித்து வரும் சிம்ரன் தமிழ்நாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவரிடம் ஒரு பேட்டியில் ஏன் திரும்ப வட மாநிலத்திற்கு செல்லவில்லை அங்கு செட்டில் ஆகி இருக்கலாமே என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த சிம்ரன் தமிழ் சினிமா அளவிற்க்கு பாலிவுட் சினிமா எளிமையான சினிமா கிடையாது. இங்கு உள்ள மக்கள் எல்லோரும் மிகவும் எளிமையாக இருக்கின்றனர்.
நடிகர்களுமே எளிமையாக இருக்கின்றனர். ஒருவரை விட இன்னொருவர் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்வதற்காக இங்கு நடிகர்களும் நடிகைகளும் எதுவும் செய்வதில்லை.
ஆனால் பாலிவுட் சினிமா அப்படி இல்லை எப்பொழுதுமே தன்னை பெருமையாக காட்டிக் கொள்வதற்கு நிறைய விஷயங்களை செய்கின்றனர் அதையெல்லாம் என்னால் சகித்துக் கொள்ள முடியாது அதனால் தான் நான் திரும்ப பாலிவுட் சினிமா பக்கமே செல்லவில்லை என்று கூறி இருக்கிறார் சிம்ரன்.
