படம் ஃப்ளாப்.. சம்பளத்தை திரும்ப குடுத்தோம்..! யார்கிட்ட? – குழப்பிவிட்ட சிரஞ்சீவி!

சிரஞ்சீவி தான் நடித்து வெளியான ஆச்சார்யா படம் தோல்வி அடைந்ததால் தனது சம்பளத்தை திரும்ப கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி நடித்து சமீபத்தில் வெளியான படம் காட்பாதர். இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் ரூ.120 கோடி இதுவரை வசூலித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் வெற்றிக் குறித்து பேசிய நடிகர் சிரஞ்சீவி தான் முன்னதாக நடித்து வெளியான ஆச்சார்யா படம் ஃப்ளாப் ஆனதையும் ஒத்துக் கொண்டிருக்கிறார். தானும் தன் மகன் ராம்சரணும் சேர்ந்து நடித்த அந்த படத்தின் தோல்விக்காக தங்களது சம்பளத்தில் இருந்து 80 சதவீதத்தை திரும்ப கொடுத்ததாக கூறி இருக்கிறார்.

கொரட்டாலா சிவா இயக்கத்தில் வெளியான ஆச்சார்யா படத்தை கொனிடெலா ப்ரொடக்சன் கம்பேனி தயாரித்தது. இந்த கொனிடெலா ப்ரொடக்சனை உருவாக்கியதே சிரஞ்சீவியும், ராம்சரணும்தான். இந்த படத்தில் துணை தயாரிப்பாளர்களாக நிரஞ்சன் ரெட்டி, அன்வேஷ் ரெட்டி இருந்தனர்.

இதனால் தற்போது 80 சதவீத சம்பளத்தை திரும்ப கொடுத்ததாக சிரஞ்சீவி சொன்னது, அதை யாரிடம் திரும்ப கொடுத்தார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Refresh