Tamil Cinema News
96 படத்தின் இரண்டாம் பாகம்.. இதுதான் கதை.. வியந்துப்போன பி.சி ஸ்ரீராம்.!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து சாதாரண வாழ்க்கையை படமாக்குவது என்பது வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு காலத்தில் தாவணி கனவுகள், விரலுகேத்த வீக்கம் போன்ற திரைப்படங்கள் வெளியாகின.
இந்த திரைப்படங்களில் பாக்கியராஜ் மாதிரியான பெரிய நடிகர்களே சாதாரண இளைஞராக நடித்திருப்பதை பார்க்க முடியும். இப்போது சினிமா வெகுவாக மாறிவிட்டது. தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களுக்குதான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் 96 என்கிற திரைப்படத்தின் வழியாக பெரும்பாலான மக்களின் மனதில் இருக்கும் சேராத காதலை கூறியிருந்தார் இயக்குனர் பிரேம். அந்த ஒரு திரைப்படமே அவரை மக்களுக்கு நெருக்கமான இயக்குனராக மாற்றியது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் நடிப்பும் வெகுவாக பேசப்பட்டது. இந்த நிலையில் அடுத்து பிரேம் இயக்கிய மெய்யழகன் திரைப்படமும் வெகுவாக பேசபட்டது. பிரேம் தஞ்சாவூர் காரர் என்பதால் பெரும்பாலும் அவரது திரைப்படங்களின் கதைக்களம் தஞ்சாவூரை சுற்றிதான் அமைந்திருக்கும்.
இந்த நிலையில் பிரேம் குமார் இயக்கிய மெய்யழகன் திரைப்படத்திற்காக விகடன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் அந்த விழாவில் பிரேம் குறித்து பேசியிருந்தார்.
அதில் அவர் கூறும்போது மெய்யழகன் திரைப்படத்தின் கதையை படித்தப்போதே நான் ஆடி போய்விட்டேன். அந்த படத்திற்கு ஹாப்பி மேன் என பெயர் வைத்திருக்கலாம். ஆனால் உண்மையான மெய்யழகன் பிரேம்தான். அடுத்து பிரேம் இயக்கும் மெய்யழகன் 2 திரைப்படத்தில் நான் வேலை செய்ய போகிறேன் என அப்டேட் கொடுத்திருக்கிறார் பி.சி ஸ்ரீராம்.
இதனை தொடர்ந்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது குறித்து இப்போது ரசிகர்களுக்கு ஆர்வம் உண்டாகி வருகிறது.
