News
தங்கலான் படம் தான் காரணமா? வசூலில் சொதப்பும் கீர்த்தி சுரேஷ் ரகுதாத்தா
தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். பாலிவுட்டிலும் தன்னுடைய காலடியை பதித்த நிலையில் இவரின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
முன்னதாக ரகு தாத்தா படத்தில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தை குறித்த எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்திருந்தது. இந்நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படம் வசூல் பற்றி தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
பெரிய படங்களுடன் போட்டியில் இறங்கிய ரகுதாத்தா
இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட படம் தங்கலான். நடிகர் விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்து தங்கலான் திரைப்படம்.
தங்கலான், டிமான்டி காலனி 2, ரகு தாத்தா ஆகிய 3 திரைப்படங்களும் வெளியாகின. மேலும் இந்த இரு படங்களுடனும் ரகு தாத்தா போட்டியில் எவ்வாறு வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரகு தாத்தா படத்தில் பல கலவையான விமர்சனங்கள் எழுந்தது.

ரகு தாத்தா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், எம் எஸ் பாஸ்கர், ஆனந்தசாமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியது. ஹிந்து திணிப்புக்கு எதிராக வைக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் மேலும் பெண்கள் ஒடுக்கு முறைக்கான வசனங்கள் என அனைத்தும் மக்களை ஈர்க்கும் விதத்தில் டிரெய்லர் அமைந்ததால் படத்தைக் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இடையே எழுந்திருந்தது. .
ஆனால் படத்தைப் பார்த்த பலரும் படம் அவ்வளவாக திருப்தி படுத்தவில்லை என்றும், கீர்த்தி சுரேஷின் நடிப்பு பாராட்டும் படியாக இருந்தது. மேலும் படம் பார்க்கும் போது பொறுமையை சோதிப்பது போல தோன்றுகிறது என பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
ரகு தாத்தாவின் கடந்த மூன்று நாள் வசூல்
தங்கலான், டிமான்டி காலனி 2 ஆகிய இரு திரைப்படங்களுடன் களம் இறங்கிய ரகு தாத்தா, முதல் நாளில் ரூபாய் 25 லட்சமும், இரண்டாவது நாளில் 10 லட்சமும், வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் 3-வது நாள் படத்தின் வசூல் 15 லட்சம் என தெரிய வந்துள்ளது. மேலும் வார இறுதி நாள் என்பதால் படத்தை பார்க்க பலரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான தங்கலான் திரைப்படம் மூன்று நாளில் 60 கோடி ரூபாயும், டிமான்டி காலனி 2 திரைப்படம் 10 கோடி ரூபாயும், ரகு தாத்தா 50 லட்சம் மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
