News
குக் வித் கோமாளியின் குத்தாட்டம் – ஜாலியா ஜிம்கானா
குக் வித் கோமாளி ப்ரோகிராமில் உள்ள குக்குகள் டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
தமிழில் டிவி ஷோக்களில் மிகவும் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் குக், கோமாளிகள், இருவருமே மிகவும் புகழ்ப்பெற்றுவிடுகின்றனர்.

பொது ஜனங்களில் அதிகமானவர்கள் குக் வித் கோமாளியின் ரசிகர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் சுருத்திகா மற்றும் ரோஷினி இருவரும் தற்சமயம் டான்ஸ் ஆடும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரோஷினி விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சுருத்திகா தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். இவர் தமிழில் ”தித்திக்குதே” போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர்கள் பீஸ்ட் திரைப்படத்தில் வரும் ஜாலியா ஜிம்கானா பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். தற்சமயம் ஒரு லட்சம் லைக்குகளை தாண்டியுள்ளது இந்த வீடியோ.
