Connect with us

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைத்த புகழ், ஸ்ருதி டாங்கெ! – இந்த வாரம் காமெடிதான்!

Tamil Cinema News

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைத்த புகழ், ஸ்ருதி டாங்கெ! – இந்த வாரம் காமெடிதான்!

Social Media Bar

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காமெடி நடிகர் புகழ் நுழைந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ப்ரதீப் எவிக்ட் செய்யப்பட்ட நிலையில் அதன் காரணம் குறித்து ஹவுஸ்மேட்ஸ் இடையே ஏற்பட்ட பலமான மோதல் கடந்த ஒருவாரமாக பிக்பாஸ் வீட்டையே ஆட்டி வைத்துவிட்டது.

ஒருபக்கம் தினேஷ், அர்ச்சனா, விசித்திரா மறுபக்கம் பூர்ணிமா, மாயா, ஐஷு, ஜோவிகா, நிக்சன் என குழுவாக மோதிக் கொண்டிருந்த நிலையில் மாயாவும் கேப்டன் என்பதையே மறந்து செயல்பட்டது வார இறுதியில் கமல்ஹாசனின் கண்டிப்புக்கு உள்ளானது.

கடந்த இரண்டு வாரங்களாக ஒரே சண்டை, சச்சரவுகளாக போய்க் கொண்டிருப்பதால் இந்த வாரம் முழுவதும் எண்டெர்டெயின்மெண்டாக ஷோவை கொண்டு செல்ல திட்டமிட்டு வருகிறார்களாம். இதனால் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் கெஸ்ட்டாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடியன் புகழை அனுப்பி இருக்கிறார்கள். அவருடன் அதே குக் வித் கோமாளியில் பங்கு பெற்ற நடிகை ஸ்ருதி டாங்கேவும் உள்ளே சென்றுள்ளார். இதனால் பழைய பகைகளை பலரும் மறந்து ராசியாகி காமெடி கண்டெண்டுகள் தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Top