Tamil Cinema News
எஸ்.கேவுக்கு ஆப்பு வைத்த ரஜினி.. இப்படி ஒரு சிக்கலா..!
அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. இதுவரை காமெடி கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதன் முதலாக அமரன் திரைப்படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தை எடுத்து நடித்தார்.
ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் நடித்த நடிப்பு இந்திய ராணுவ வீரர்கள் மத்தியிலேயே அதிக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே ஆக்ஷன் திரைக்கதைகளாக இருக்கின்றன.
அந்த வகையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராசி மற்றும் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய திரைப்படங்களில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் மதராசி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டன.
இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரையரங்கிற்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பெரும்பாலும் ஆகஸ்ட் 15க்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரஜினிகாந்த் உடன் போட்டி போட்டு சிவகார்த்திகேயன் தன்னுடைய படத்தை வெளியிடுவாரா அல்லது தேதியை மாற்றி வைப்பாரா என்பது தெரியாத விஷயமாக இருக்கிறது.
