News
அட்லிக்கு டஃப் கொடுப்பார் போல.. அப்படியே பாக்கியராஜை காப்பியடித்த நடிகர் யோகராஜ்!.. யார் தெரியுமா?
சினிமாவை பொறுத்தவரை எப்போதும் நமக்கான தனித்துவமான ஒரு நடிப்பு இருக்க வேண்டும். மற்றவர்களை காப்பி அடித்து நடிப்பவர்கள் எதிர்காலத்தில் சினிமாவில் இருக்க முடியாது. ஆனாலும் சில நடிகர்கள் தனக்கென தனித்துவமான நடிப்பை வைத்துக் கொள்ளாமல் மற்றவர்கள் போல நடித்து சினிமாவில் குறுகிய காலமே விருந்து சென்றுள்ளனர்.
அப்படியான ஒரு நடிகர் தான் யோகராஜ். நடிகர் எம்.ஆர் யோகராஜ் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு பாக்யராஜ் போலவே இருப்பார். பாக்யராஜ் போன்றே கண்ணாடி அணிந்து ஹேர்ஸ்டைல் வரை அனைத்தும் பாக்யராஜ் போலவே வைத்திருப்பார்.
முதன் முதலாக ஊமைக்குயில் என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பாக்யராஜ் அப்பொழுது திரையில் பெரிய நடிகராக இருந்த பொழுதும் கூட இவருக்கும் அங்கீகாரம் கிடைத்தது. அதனை தொடர்ந்து பாக்கியராஜிடம் கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் யோகராஜை வைத்து படம் இயக்க முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் நிறைய படங்கள் யோகராஜ் நடிக்க துவங்கினார் ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது நடிப்பிற்கான வரவேற்பு குறைய தொடங்கியது. ஏனெனில் அவர் பாக்கியராஜ் போலவே நடித்தாரே தவிர அவருக்கு என்று தனிப்பட்ட நடிப்பை கொண்டு வரவில்லை.
இதனால் மக்கள் ஒரு அளவிற்கு மேல் அவரது திரைப்படங்களை பார்ப்பதை விட்டு விட்டனர். சில காலங்களிலேயே சினிமாவை விட்டும் விலகிவிட்டார் யோகராஜ். பலரும் அறியாத நடிகர் என்றாலும் கூட தமிழில் கிட்டத்தட்ட பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
