Cinema History
கமல் பெர்மிஷன் குடுத்தாதான் வொர்க் பண்ணுவேன்! – ரஜினியையே காக்க வைத்த க்ரேஸி மோகன்!
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற வசனகர்த்தாக்களில் முக்கியமானவர் க்ரேஸி மோகன். நகைச்சுவையான மேடை நாடகங்கள் பலவற்றை நடத்திய க்ரேஸி மோகன் பல படங்களில் வசனங்களிலும் சிறப்பாக செயல்பட்டவர். முக்கியமாக கமல் – க்ரேஸி மோகன் இணைந்து விட்டால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அப்படி ஒரு காம்பினேஷன்.
இவர்கள் காம்பினேஷனில் வெளியான பஞ்ச தந்திரம், அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் என ஹிட் அடிக்காத படங்களே இல்லை. 1990களில் இவர்கள் காம்பினேஷன் வெற்றிக் கூட்டணியாக இருந்தது மைக்கெல் மதன காமராஜன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி என க்ரேஸி மோகன் வசனம் எழுதிய படங்கள் பல. அப்போதுதான் ரஜினி ‘முத்து’ படத்தில் நடித்து ஹிட் கொடுத்திருந்தார்.
அந்த சமயம் 1996ல் வெளியான கமல்ஹாசனின் ஆக்ஷன் படமான இந்தியன், காமெடி படமான அவ்வை சண்முகி இரண்டுமே செம ஹிட். அப்போது க்ரேஸி மோகனுக்கு கால் செய்து பேசிய ரஜினிகாந்த், “நாந்தான் ரஜினி பேசறேன்” என சொன்னதும் க்ரேஸி மோகன் அதை நம்பவில்லை. “யாருடா அது..? என்ன கிண்டல் பண்றிங்களா?” என கேட்டுள்ளார்.
பின்னர் அது உண்மையாகவே ரஜினிதான் என தெரிந்ததும் ஆச்சர்யமடைந்துள்ளார். ரஜினி க்ரேஸி மோகனிடம் “என்ன நீங்க கமல் படத்துக்கு மட்டும்தான் வொர்க் பண்ணுவீங்களா.. நம்ம படத்துல பண்ண மாட்டீங்களா?” என கேட்டுள்ளார். அதற்கு க்ரேஸி மோகன், நான் பல படங்களாக கமலோடுதான் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். எதுக்கும் கமல்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கறேன் என சொல்லியிருக்கிறார்.
மறுநாள் கிரேஸி மோகன் கமலை பார்க்க சென்றுள்ளார். ஆனால் அதற்கு ரஜினியே கமலுக்கு ஃபோன் செய்து இந்த விஷயத்தை சொல்லிவிட்டாராம். அதனால் கமல் “என்ன மோகன், ரஜினி கூட படம் பண்றீங்களாமே.. சூப்பரா பண்ணுங்க” என சொல்லி வாழ்த்தியுள்ளார்.
அதன்பிறகு ரஜினியுடன் க்ரேஸி மோகன் வசனம் எழுதி நடித்த படம் தான் 1997ல் வெளியான அருணாச்சலம். சுந்தர்.சி இந்த படத்தை இயக்கினார். பொதுவாக கமலுக்கு க்ரேஸி மோகன் வசனங்கள் எழுதும்போது அதில் உள்ளார்ந்த ரகசிய பகடிகள், குழப்பும் காமெடி வார்த்தைகள் இடம் பெறும். ஆனால் அதை அருணாச்சலத்தில் தவிர்த்து ரஜினி மீட்டருக்கு ஏற்ப காமெடி வசனங்களை அமைத்திருப்பார் க்ரேஸி மோகன்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்