Connect with us

பொன்னியின் செல்வனுக்கு முன்பே பெரும் போராட்டத்தில் படமான நாவல்… ஆனால் நடிச்சது சிவாஜி கணேசன்!.. எந்த படம் தெரியுமா?.

sivaji ganesan

Cinema History

பொன்னியின் செல்வனுக்கு முன்பே பெரும் போராட்டத்தில் படமான நாவல்… ஆனால் நடிச்சது சிவாஜி கணேசன்!.. எந்த படம் தெரியுமா?.

Social Media Bar

தமிழ் சினிமாவில் நாவல்கள் படமாவது என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. உலகம் முழுக்க பல நாவல்கள் படமாகியுள்ளன. ஆனால் பொன்னியின் செல்வன் நாவல் மட்டும் எம்.ஜி.ஆர் காலம் முதலே படமாக்க வேண்டும் என பலரும் நினைத்து கைவிட்டு இறுதியாக இயக்குனர் மணிரத்தினத்தால் படமாக்கப்பட்டது.

ஆனால் அதே போல ஒரு பழம் பெரும் திரைப்படத்தையும் சிரமப்பட்டு படமாக்கியுள்ளனர். தமிழ் சினிமாவில் படங்களை இயக்குதல், வசனம் எழுதுதல் என பல துறைகளில் இருந்து வந்தவர் கொத்தமங்கலம் சுப்பு (kothamangalam subbu). அவருக்கு அருமையாக கதை சொல்ல தெரியும்.

இந்த நிலையில் ஆனந்த விகடனின் உரிமையாளரும், பட தயாரிப்பாளருமான எஸ்.எஸ் வாசனுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இவர் கூறும் விஷயங்கள் எல்லாம் எஸ்.எஸ் வாசனுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி சுப்பு ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது தஞ்சாவூரின் சிறப்புகளை பற்றி கூறிக்கொண்டிருந்தார்.

kothamangalam-subbu
kothamangalam-subbu

அப்போது தஞ்சாவூரில் இறங்கியதுமே அங்கு நாதஸ்வரத்தின் சத்தமும், பூக்களின் மணமும் வீசும். கொஞ்ச தூரம் சென்றால் பழமையான சிற்பங்களையும் பரதநாட்டியம் ஆடும் பெண்களையும் பார்க்க முடியும் என விவரித்து கொண்டிருந்தார்.

இதை கேட்டதும் எஸ்.எஸ் வாசன், (SS Vasan) ஆனந்த விகடனுக்கு இப்படி தஞ்சாவூரை அடிப்படையாக கொண்டு தொடர்கதை ஒன்றை எழுதி கொடுங்களேன் என கூறினார். சுப்புவும் அதற்கு ஒப்புக்கொண்டு ஒரு சுவாரஸ்யமான கதையை எழுதினார். தில்லானா மோகனாம்பாள் என்னும் அந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இதனை படமாக்கலாம் என முடிவெடுத்தார் எஸ்.எஸ் வாசன். அதே சமயம் இயக்குனர் ஏ.பி நாகராஜனும் இந்த கதையின் மீது ஈடுபாடாக இருந்தார். எனவே எஸ்.எஸ் வாசன் அந்த கதையை ஏ.பி நாகராஜன் இயக்கத்தில் தயாரிக்க முடிவெடுத்தார்.

ஆனால் ஏ.பி நாகராஜன் (AP Nagarajan) அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவரே அந்த படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டார். ஏனெனில் அந்த படம் கண்டிப்பாக நிறைய வசூல் செய்யும் என அவர் நம்பினார். இதனாலேயே அந்த படம் 10 வருடங்களாக கிடப்பில் கிடந்தது. அதன் பிறகு விட்டுக்கொடுத்த எஸ்.எஸ் வாசன் அந்த படத்தின் கதையை வெறும் 10,000 ரூபாய்க்கு ஏ.பி நாகராஜனுக்கு கொடுத்தார். பிறகுதான் அது தில்லானா மோகனாம்பாள் என்ற பெயரிலேயே படமாக்கப்பட்டது.

அந்த 10,000 ரூபாயையும் அந்த கதையை எழுதிய எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்புவிடம் கொடுத்தார் எஸ்.எஸ் வாசன்.

To Top