Tamil Cinema News
தளபதியோடு அந்த ஆசை.. வெளிப்படையாக கூறிய பிரபல நடிகை.!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். மேலும் அவர் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். அவரது இடத்தில் இருக்கும் எந்த ஒரு நடிகரும் இப்படி சினிமாவில் உச்சத்தை விட்டு விட்டு அரசியலுக்கு சென்றது கிடையாது.
எம்.ஜி.ஆருக்கு பிறகு இதை செய்வது விஜய்தான் என ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் அதிரடியாக இருந்து வருகின்றன.
திரைப்படங்களில் நடித்த வரை விஜய் பெரிதாக அரசியல் விமர்சனம் என எதுவும் கொடுத்தது கிடையாது. ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அவரது பேச்சு வழக்குகள் மாறியுள்ளனர். இளைஞர்கள் மத்தியில் தற்சமயம் விஜய்க்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
பலரும் இப்போதே விஜய்க்கு ஆதரவளிப்பதை பார்க்க முடிகிறது. எனவே விஜய்யின் அரசியல் எண்ட்ரி கண்டிப்பாக தமிழக அரசியலில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய நடிகை தர்ஷா கூறும்போது எனக்கு விஜய்யை பிடிக்கும் என்னுடைய ஆதரவு விஜய்க்குதான், என்னையும் அரசியலுக்கு அழைக்கிறார் என்றால் கண்டிப்பாக நான் அவருடைய கட்சியில் சேர்ந்துவிடுவேன் என கூறியுள்ளார்.
இது அதிக வைரல் ஆகி வருகிறது.
