News
ராஜமௌலி இயக்கத்தில் களம் இறங்கும் டேவிட் வார்னர்.. இது என்னப்பா புதுக்கதை!..
ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் வீரராக இருந்தாலும் இந்தியாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருப்பவர் டேவிட் வார்னர். இவர் ஆடும் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, டிக்டாக்கில் தெலுங்கு, தமிழ் பட பாடல்களுக்கு இவர் ஆடும் ரீல்ஸுக்கு கண்டிப்பாக ஏராளமான பேன்ஸ் இருப்பார்கள்.
தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் பாடல்களுக்கு டேவிட் வார்னர் செய்த ரீல்ஸ் ட்ரெண்டான நிலையில் தற்போது ரசிகர்கள் அவரை ‘புஷ்பா’ வார்னர் என்றே அழைத்து வருகின்றனர். கிரிக்கெட் மைதானத்தில் ஃபீல்டிங்கில் நிற்கும்போது கூட புஷ்பா பாட்டு போட்டால் வார்னர் ஆடி விடுவார்.
விரைவில் வார்னர் தெலுங்கு படத்தில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என ரசிகர்கள் பேசி வந்த நிலையில் அப்படியான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

தெலுங்கி சினிமாவில் மகதீரா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி, பின்னர் பாகுபலி, ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட பல பேன் இந்தியா வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராஜமௌலி. இவரது பாகுபலி -2, ஆர் ஆர் ஆர் ஆகிய படங்கள் உலகளவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்தவை.
தற்போது தனது 29வது படத்தை இயக்கி வரும் ராஜமௌலி கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை இயக்குவதாக விளம்பர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.க்ரெட் செயலி குறித்த அந்த விளம்பரத்தில் பேமண்டில் டிஸ்கவுண்ட் வேண்டும் என ராஜமௌலி கேட்க, அதற்கு தன்னை வைத்து படம் இயக்க வேண்டும் என வார்னர் கேட்கிறார்.

அதை தொடர்ந்து ராஜமௌலியின் பிரபலமான பாகுபலி உள்ளிட்ட படங்களில் வார்னர் நடிப்பது போன்ற ஷூட்டிங் காட்சிகள் காட்டப்படுகின்றன. காமெடியான இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இதை பகிர்ந்து வரும் ரசிகர்கள் பலரும் விரைவில் டேவிட் வார்னர் ராஜமௌலி படத்தில் நிஜமாகவே நடிக்கும் காலம் வரும் என்று கூறி வருகின்றனர்.
