Tamil Cinema News
லியோ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா!.. இப்படியே போனா ஜெயிலரை தாண்டிடும்!.
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தற்சமயம் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் லியோ. படம் முழுக்க சண்டை காட்சிகள் அதிகம் உள்ளது என்றாலும் படத்தில் பார்த்திபனாக வரும் விஜய் கதாபாத்திரம் லியோவா அல்லது பார்த்திபனா என்கிற சஸ்பென்சிலேயே திரைப்படம் நகர்கிறது என்று கூறப்படுகிறது.
அந்த சஸ்பென்ஸ்தான் படத்தின் மொத்த கதையே என்பதால் கதை குறித்து யாரும் ஸ்பாய்லர் செய்ய வேண்டாம் என வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் லியோ திரைப்படம் புக்கிங் ஓபன் ஆன அன்றே பல திரையரங்குகளில் ஐந்து முதல் ஆறு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன என கூறலாம்.
இந்த நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் லியோ திரைப்படம் உலக அளவில் 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிவதற்குள் எப்படியும் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை செய்துவிடும் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் ஆயிரம் கோடி வசூல் செய்யவில்லை. கன்னடம் மற்றும் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் தான் அப்படியான வசூல் சாதனை செய்துள்ளன. ஒருவேளை லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்தால் தமிழில் முதலில் ஆயிரம் கோடிக்கு ஓடிய திரைப்படமாக லியோ இருக்கும்.
