Cinema History
எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த பாட்டை பாட மாட்டேன்!.. தேவாவிற்கு பயம் காட்டிய திகில் பாடல்..
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்கள் பலருக்கும் இசையமைத்தவர் தேவா. கிராமிய இசையை சினிமாவிற்கு கொண்டு வந்து அதை வைத்து ஹிட் கொடுத்தவர் தேவா. தேவா ஒரு நல்ல பாடகரும் கூட, அவர் பாடிய பல பாடல்கள் பிரபலமானவை.
இப்போதும் கிராமங்களில் ஓடும் பஸ்களில் தேவாவின் பாடல்களை கேட்பதை பார்க்கலாம். அந்த அளவிற்கு கிராம மக்களிடம் இவரது பாடல்கள் பிரபலமானவை. தேவா இசையமைப்பாளராக இத்தனை பாடல்கள் பாடியப்போதும் அவர் பாடவே பயந்த பாடலும் ஒன்று உண்டு.
தனிப்பட்ட முறையில் அந்த பாடல் எஸ்.ஜே சூர்யா மற்றும் தேவா இருவருக்குமே தொடர்புள்ள பாடல். வியாபாரி படத்தில் வரும் ஆசைப்பட்ட எல்லாத்தையும் பாடல்தான் அது. அந்த பாடலுக்கு தேவா இசையமைக்கும்போது அவரே அந்த பாடலை பாடியுள்ளார்.
அதனை கேட்கும்போது எஸ்.ஜே சூர்யாவிற்கு அவரது தாயின் நினைவு வந்துவிடவே எஸ்.ஜே சூர்யா அழ துவங்கியுள்ளார். அந்த பாடலை பாதி பாடி முடித்த உடனேயே தேவாவிற்கு போன் வந்துள்ளது. அதில் அவரது தாய் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக செய்தி வந்துள்ளது.
இந்த பாடலை பாடுவதால்தான் இவ்வாறு நடக்கிறது என நினைத்த தேவா அதற்கு பிறகு அந்த பாடலை பாடவில்லை. எந்த இசை நிகழ்ச்சிகளிலும் கூட தேவா அந்த பாடலை பாடமாட்டாராம்.
