Connect with us

க்ளோஸ் பண்ண வரேன்.. சினிமா விமர்சகர்களுக்கு எதிரா சர்ச்சை வரிகள்.. வெளியான சந்தானம் பட பாடல்.!

Tamil Cinema News

க்ளோஸ் பண்ண வரேன்.. சினிமா விமர்சகர்களுக்கு எதிரா சர்ச்சை வரிகள்.. வெளியான சந்தானம் பட பாடல்.!

Social Media Bar

நடிகர் சந்தானம் நடிக்கும் காமெடி திரைப்படங்கள் என்றாலே மக்கள் அவற்றை விரும்பி பார்ப்பதுண்டு. கலவையான காமெடி திரைப்படங்கள் நடித்து வந்த சந்தானத்திற்கு திடீரென கை கொடுக்கும் படங்களாக பேய் படங்கள் அமைந்தன.

அவர் நடித்த தில்லுக்கு துட்டு திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து வரிசையாக பேய் படங்களாக நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். அந்த வகையில் தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படம் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்.

படத்தின் கதைப்படி சந்தானம் திரைப்பட விமர்சகராக இருந்து வருகிறார். செல்வராகவன் பேயாக இருக்கிறார். ஆனால் அவருக்கு திரைப்பட விமர்சகர்களையே பிடிக்காது. எனவே சந்தானத்தை அவர் ஒரு பேய் படத்திற்குள் அனுப்புகிறார்.

அங்கிருந்து சந்தானம் எப்படி வெளியேறுகிறார் என்பதுதான் கதை. இந்த படத்தில் திரைப்படங்களை கலாய்க்கும் விதத்தில் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. அதனை தொடர்ந்து தற்சமயம் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியானது.

இந்த பாடலை செல்வராகவனுக்காக உருவாக்கி இருக்கிறார்கள். எனவே பாடல் முழுக்கவும் செல்வராகவன் திரைப்பட விமர்சகர்களை திட்டுவது போல பாடல் வரிகள் அமைந்துள்ளன. இந்த பாடல் இப்போது ட்ரெண்ட் ஆக துவங்கியுள்ளன.

To Top