மாற்றம் தந்த மாமாவை மறந்த தனுஷ் ? வேதனையில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக நடிகர் தனுஷ் இருக்கிறார். இன்றைய நாளானது நடிகர் தனுஷ்க்கு முக்கியமான நாளாகும்.

நடிகர் தனுஷ் சினிமாவிற்கு வந்து இன்றோடு 20 வருடங்கள் ஆகின்றன. முதன் முதலாக அவர் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படமானது 10 மே 2002 அன்று வெளியானது. எனவே தனுஷ் திரையுலகில் தனது பயணத்தை துவங்கி 20 வருடங்கள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதற்காக அனைவருக்கும் நன்றி கூறி ஒரு கடிதத்தை வெளியிட்டார் நடிகர் தனுஷ். அதில் இதுவரைக்கும் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார். அதில் தனது சகோதரர் செலவராகவன் மற்றும் தனது தந்தை கஸ்தூரி ராஜாவிற்கும் நன்றியை தெரிவித்தார்.

ஆனால் அவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமான நடிகர் ரஜினியை தனுஷ் மறந்துவிட்டார் என பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர். நடிகர் தனுஷ் ரஜினிக்கு மாப்பிளையாக ஆன பிறகு அவர் பெரிய வளர்ச்சியை கண்டார். மேலும் அவரது நடை, உடை பாவனைகளில் கூட நாம் அதிகம் ரஜினியை காண முடியும். அந்த அளவிற்கு நடிகர் தனுஷிக்கும், ரஜினிக்குமிடையே உறவு இருந்தது. ரஜினிக்கு மருமகன் ஆன பிறகே இயக்குனராகவும் இவர் நல்ல வளர்ச்சியை கண்டார்.


அவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த நடிகர் ரஜினிக்கு அவர் நன்றி கூறாதது தவறான விஷயமாகும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் குடும்ப சிக்கல்கள் காரணமாகவும் அவர் ரஜினியை குறிப்பிடாமல் இருந்திருக்கலாம் எனவும் பேச்சுக்கள் உள்ளன.

Refresh