படம் ஓடுதோ.. இல்லையோ! என் லெவலெ வேற..! – ஜாலி மூடில் பூஜா ஹெக்டே!

இந்திய சினிமாவில் பல மொழி படங்களிலும் நடித்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமானவர் பூஜா ஹெக்டே.

தமிழில் முகமூடி படத்தின் மூலமாக அறிமுகமானவர், பின்னர் தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது நீண்ட காலம் கழித்து விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். ஆனால் சமீப காலமாக பூஜா ஹெக்டே நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியடையவில்லை.

தெலுங்கில் பிரபாஸுடன் இவர் நடித்த ராதே ஸ்யாம், தமிழில் பீஸ்ட், தெலுங்கில் தற்போது வெளியான ஆச்சர்யா என அனைத்து படங்களும் சுமாரான வரவேற்பையே பெற்றன.

Pooja Hegde

ஆனாலும் அடுத்தடுத்து அதிக படங்களில் பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தற்போது பிரான்சில் தொடங்க உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவிலிருந்து ஒரு சில நடிகர்கள், நடிகைகள், திரை கலைஞர்களுக்கு மட்டுமே சிவப்பு கம்பள வரவேற்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான், அக்‌ஷய் குமார், தீபிகா படுகோனே உள்ளிட்ட பிரபலங்களுடன் பூஜா ஹெக்டேவுக்கு இந்த சிவப்பு கம்பள வரவேற்புக்கு அழைப்பு வந்துள்ளது. இந்தியாவின் சினிமா பிரதிநிதியாக தான் அழைக்கப்பட்டுள்ளதில் கொண்டாட்ட மூடில் உள்ளாராம் பூஜா.

Refresh